திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயில் என்பது கரூர் மாவட்டம் சோமூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருமுக்கூடலூரில் அமைந்துள்ள சிவாலயமாகும். [1] இச்சிவாலயம் காவிரி, அமராவதி ஆகிய இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமராவதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. [1]
Remove ads
சன்னதிகள்
இச்சிவாயத்தின் மூலவர் அகத்தீசுவரர், அம்பாள் அஞ்சநாச்சியம்மன்.[1] கோயில் சிதலமடைந்து இருப்பதால் எண்ணற்ற சிலைகள் மூலவர் சன்னதியின் முன்புள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. கோஸ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா ஆகியோர் உள்ளனர். சிவாலயத்தின் பின்புறத்தில் ஒரு சித்தரின் சமாதி அமைந்துள்ளது. வில்வ மரத்தடியில் ஒரு தனி லிங்கம் அமைந்துள்ளது. சண்டிகேசுவர் மற்றும் அகோரவீரபத்திரர் சன்னதியும் உள்ளது. வள்ளி தெய்வானையுடன் உள்ள ஆறுமுகப் பெருமான் சன்னதி தரைமட்டமாகி உள்ளது. அதனால் சிலைகள் மூலவர் சன்னதிக்கு முன்பு உள்ளது.
Remove ads
தலவரலாறு
காசியிலிருந்து வாலி காசிலிங்கத்தினை பிரதிஸ்டை செய்ய இத்தலத்திற்கு வந்தார். ஆனால் அதற்கு முன்பே அகத்தியர் இத்தலத்தில் மணலால் ஆன இலிங்கத்தினை பிரதிஸ்டை செய்து வழிபட்டுவிட்டார். தான் காசிக்கு சென்று எடுத்துவந்த காசிலிங்கத்தையே இங்கு பிரதிஸ்டை செய்ய வேண்டுமென வாலி அகத்தியருடன் சண்டைக்கு சென்றார். அகத்தியர் இந்த மணல் சிற்பத்தை வாலால் அசைத்துப் பார்த்து, முடிந்தால் இந்த லிங்கத்தை எடுத்துவிட்டு நீ கொண்டு வந்த இலிங்கத்தை வைத்து வழிபடு என்றார். வாலியும் தன்னுடைய முழு பலத்தை பிரயோகம் செய்து அசைத்துப் பார்த்தார். ஆனால் வாலால் இலிங்கத்தை அசைக்க முடியவில்லை. அதனால் காசிலிங்கத்தினை காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சிறீராமசமூத்திரம் என்கிற அயலூரில் பிரதிஸ்டை செய்தார். அத்தலம் அயலூர் வாலீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. [1]
Remove ads
தொன்மை
இக்கோயில் 2000 ஆண்டுகள் தொன்மையானது.[1]
படத்தொகுப்பு
- திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயிலில் உள்ள சிற்பம்
- திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயிலில் தலவரலாற்றை உணர்த்தும் சிற்பம்
- திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயிலில் உள்ள சித்தர் சமாதி
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads