திருமுழுக்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருமுழுக்கு அல்லது ஞானஸ்நானம் (Baptism)என்பது கிறித்தவத்தில் நீரைப் பயன்படுத்தி செய்யப்படும் சமயம் சார்ந்த கழுவுதல் சடங்காகும்.[1][2] மிகப் பெரும்பான்மையான கிறித்தவ திருச்சபைகள் திருமுழுக்குச் சடங்கைக் கடைப்பிடிக்கின்றன.

இது ஒருவரின் பிறப்புநிலைப் பாவத்தையும் செயல்வழிப் பாவத்தையும் போக்கி, கிறிஸ்துவோடு ஒருவரை இணைத்து, அவரைக் கடவுளின் பிள்ளையாகவும் திருச்சபையின் உறுப்பினராகவும் ஆக்குகின்ற அருள்சாதனமாகக் கருதப்படுகின்றது.
Remove ads
பெயர்த் தோற்றம்

திருமுழுக்கு என்னும் சொல் Βάπτισμα (baptisma) என்னும் கிரேக்கச் சொல்லின் தமிழாக்கம் ஆகும். அதற்குக் கழுவுதல், குளிப்பாட்டுதல், நீராடல் என்னும் பொருள் உண்டு. திருமுழுக்குப் பெறுவோரைத் தண்ணீரில் முழுவதுமாக அமிழ்த்தி இச்சடங்கைச் சில சபைகள் நிகழ்த்துகின்றன.
கத்தோலிக்க திருச்சபையில் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கும் பழக்கம் நீடித்துவந்துள்ளது. திருமுழுக்குப் பெறுவோரின் தலைமீது தண்ணீர் வார்க்கும் பழக்கம் இச்சபையில் பரவலாக உள்ளது. திருமுழுக்குப் பெறுவோரின் தலையைத் திருமுழுக்குத் தொட்டியில் உள்ள நீரில் அமிழ்த்தி, அல்லது அவரை முழுதுமாக அந்நீரில் அமிழ்த்தி இச்சடங்கை நிகழ்த்தும் முறையும் கத்தோலிக்க திருச்சபையில் ஆங்காங்கே பரவிவருகிறது. இவ்வாறு பாவக்கறை கழுவப்பட்டு, தூய்மை அடைந்து இறையருளைப் பெறுகின்ற செயல் அடையாள முறையில் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது.
திருமுழுக்குப் பெறுவோரின் தலைமீது நீரைத் தெளித்து, திருமுழுக்கு வழங்குவதும் உண்டு.
Remove ads
திருமுழுக்கு வழங்கப்படும் முறை
திருமுழுக்கு என்னும் அருள்சாதனத்தின் அடிப்படையான கூறுகள் இரண்டு. அவை, நீரால் கழுவப்படுதலும், அப்போது சொல்லப்படுகின்ற வாய்பாடும் ஆகும். கத்தோலிக்க திருச்சபையும் வேறு பல கிறித்தவ சபைகளும் "தந்தை (பிதா), மகன் (சுதன்), தூய ஆவியின் பெயரால்" திருமுழுக்கு வழங்குகின்றன. இதற்கு ஆதாரமாக மத்தேயு நற்செய்தியில் இயேசு சீடர்களுக்குக் கட்டளை கொடுத்து அனுப்பும் பகுதி (மத்தேயு 28:16-20). அதன்படி,
“ | இயேசு பன்னிரு சீடர்களையும் அணுகி, 'விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும்.எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே, நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்: தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்' என்றார் (மத் 28:18-19). | ” |
"ஒருமை பெந்தகோஸ்து சபையினர்" (Oneness Pentacostals) மூவொரு இறைவன் என்னும் கோட்பாட்டை ஏற்காததால், "இயேசுவின் பெயரால்" மட்டுமே திருமுழுக்கு அளிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள் காட்டுகின்ற விவிலிய ஆதாரங்களில் ஒன்று:
“ | பேதுரு அவர்களிடம், 'நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்' என்றார் (திருத்தூதர் பணிகள் 2:38). | ” |
Remove ads
திருமுழுக்கு வழங்காத சபைகள்
சில கிறித்தவர்கள் குறிப்பாக குவாக்கர், இரட்சணிய சேனை மதக்குழுவினர் திருமுழுக்கு தேவை என்னும் கோட்பாட்டை ஏற்பதில்லை.
திருமுழுக்கின் வரலாறு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads