திருமூலஸ்தானம் கைலாசநாதர் கோயில்

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருமூலஸ்தானம் கைலாசநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

விரைவான உண்மைகள் கைலாசநாதர் கோயில், அமைவிடம் ...
Remove ads

அமைவிடம்

இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் அருகே திருமூலஸ்தானம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக கைலாசநாதர் உள்ளார். இறைவி காமாட்சி ஆவார்.[1]

அமைப்பு

முற்கால சோழர்களின் கட்டடக்கலைச் சான்றாக உள்ள இக்கோயிலில் தஞ்சை நாயக்க மன்னர்களின் அழகான சிற்பக்ள் உள்ளன.சித்திரை முதல் வாரத்தில் மூலவர்மீது சூரிய ஒளி விழுகிறது. ஆஸ்தான மண்டபம் சிறிய அளவிலான செங்கற்களால் குகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் வெளிப்புற சுவற்றில் கிரந்த தமிழ் எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயில் வளாகம் முழுவதும் செடிகளும், முட்புதர்களும் காணப்பட்டு, பராமரிப்பின்றி உள்ளது. அகத்தியர் சிவனை வணங்குவது போன்ற சிற்பம் உள்ளது. கோயில் பராமரிப்புக்காக தரப்பட்ட கொடை பற்றிய விவரங்கள் இதில் காணப்படுகின்றன. துர்க்கை, இலட்சுமி, சரசுவதி ஆகிய மூவரும் உலக இன்னல்கள் தீர இறைவனை வழிபட்டுள்ளனர். சிவ பார்வதி திருமணத்தைக் காண உலக உயிர்கள் அனைத்தும் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்தபோது வட பகுதி தாழ்ந்து தென் பகுதி உயரவே, சிவன் அகத்தியரை அழைத்து நிலையைச் சரிசெய்வதற்காக தென் பகுதிக்குச் செல்லும்படி பணித்தார். அகத்தியர் தான் சென்ற இடங்களில் லிங்கத் திருமேனிகளை அமைத்து வழிபட்டுச் சென்றார். அவ்வாறான லிங்கத்திருமேனிகளில் இக்கோயிலில் உள்ளதும் ஒன்றாகும். பின்னர் இங்கு கோயில் கட்டப்பட்டது.[1]

விழாக்கள்

பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads