திருவரங்கம் தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவரங்கம் தொடருந்து நிலையம் (Srirangam railway station) தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு முக்கியமான தொடருந்து நிலையம் ஆகும். இதன் குறியீடு SRGM ஆகும். இது திருவரங்கம் பகுதி மற்றும் அரங்கநாதசுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்குச் சேவை செய்கிறது. இந்த நிலையம் நான்கு மேற்கூரை வசதிகள் கொண்ட நான்கு நடைமேடைகளைக் கொண்டுள்ளது.[1]

Remove ads
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[2][3][4][5][6][7]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, திருவரங்கம் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 6.77 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[8][9][10][11]
22 மே 2025 அன்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, அமிர்த பாரத் நிலைய திட்டத்தின் கீழ் திருவரங்கம் தொடருந்து நிலையத்தில் முடிவு பெற்ற பணிகளை நாட்டிற்கு அர்பணித்து வைத்தார்.[12][13]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads