திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்

சென்னை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்
Remove ads

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் (Marundeeswarar Temple) சென்னைபுதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில், சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1] திருவாண்மியூர் மருந்தீஸ்வரர் சிவன் கோவில் கிபி 11ஆம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டது இந்த திருவாண்மியூர் மருந்தீஸ்வரர் சிவன் கோவில்.

விரைவான உண்மைகள் தேவாரம்,திருப்புகழ் பாடல் பெற்ற திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
Thumb
சிவன் கோவில்
Remove ads

இறைவன், இறைவி

Thumb
கோயிலின் கொடிமரம்

இங்கு மூலவர் மருந்தீசுவரர் மேற்கு நோக்கி அமர்ந்துள்ளார், தாயார் திரிபுரசுந்தரி அம்மன் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. விநாயகர், முருகன் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. கோயிலின் கிழக்கு கோபுர வாசல் முன்னே தெப்பகுளமும், உள்ளே ஒரு சிறிய தடாகமும், நந்தவனம் கோயிலுக்கு உள்ளேயேயும் அமைந்துள்ளது.

அமைப்பு

Thumb
கிழக்கு வாயில் ராஜகோபுரம்
Thumb
மருந்தீஸ்வரர் சன்னதி
Thumb
கோயிலின் பிரதான ராஜகோபுரம்

இராஜ கோபுரம் கிழக்குப் பார்த்த நிலையில் உள்ளது. இராஜ கோபுரத்தை அடுத்து உள்ளே முன் மண்டபம் உள்ளது. அதனை அடுதது கோயிலின் வலப்புறம் திரிபுரசுந்தரி அம்மன் சன்னதி உள்ளது. கோயிலின் வெளியே குளம் உள்ளது. கோயிலின் வெளி திருச்சுற்றில் மூன்று விநாயகர்கள், வேதாகம பாடசாலை, நூலகம், திருமுறை மண்டபம் ஆகியவை உள்ளன. மூலவர் சன்னதிக்கு வலப்புறம் தியாகராசர் சன்னதி உள்ளது. மூலவர் மருந்தீசர் சன்னதியின் உள் சுற்றில் கஜலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நடராசர் சன்னதி, 108 சிவலிங்கங்கள், கால பைரவர், கேதாரீஸ்வரர், இராமாநாதேஸ்வரர், சுந்தரேஸ்வரர், உண்ணாமலையம்மை, ஜம்புகேஸ்வரர், 67 நாயன்மார்கள், விநாயகர், நால்வர் ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறை திருச்சுற்றில் துர்க்கை, சண்டிகேஸ்வரர், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, கணபதி ஆகியோர் உள்ளனர். மேற்கு வாயில் வழியின் வரும்போது கோபுரத்தை அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை காணப்படுகின்றன.

Remove ads

முக்கிய திருவிழாக்கள்

பிற சிறப்புகள்

  • வருடம் 365 நாட்களும் இக்கோயிலில் சமய சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
  • நிறைய பசுக்களை கொண்ட ஒரு பசுமடமும் உள்ளது.
  • ஆன்மிக நூலகம் உள்ளது.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

படக்காட்சிகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads