திருவாரூர் கே. தங்கராசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவாரூர் கே.தங்கராசு தமிழ்த் திரைப்பட திரைக்கதை, மற்றும் வசன கர்த்தா ஆவார். இவர் பெரியாரின் கொள்கைப்பற்றுள்ளவர். இவர் பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர் ஆவார்.
Remove ads
படைப்புகள்
ராமாயணப் பகுத்தறிவு என்ற புத்தகம் எழுதி வெளியிட்டார். அதை அப்போதைய காங்கிரசு அரசு தடை செய்தது. இவர் எழுதிய ரத்தக்கண்ணீர் என்ற நாடகம் ரத்தக்கண்ணீர் என்ற படமாக எடுக்கப்பட்டது. அதில் நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்தார். இவர் திருஞானசம்பந்தர் என்னும் ஒரு நாடகமும் எழுதியிருக்கிறார்.
போராட்டங்கள்
1957 அரசியல் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது 3,000 பேர் சிறை சென்றனர். அதனை எதிர்த்து மாநிலம் முழுவதும் கூட்டங்கள் நடத்தினார்.
மறைவு
5 சனவரி 2014 அன்று மாரடைப்பால் தன் 87-ஆம் அகவையில் காலமானார் தங்கராசு.[1][2][3]
குடும்பம்
தங்கராசுவுக்கு காந்தரூபினி என்ற மனைவியும், மலர்க்கொடி, மண்டோதரி என்ற மகள்களும், புகழேந்தி என்ற மகனும் உள்ளனர். புகழேந்தி, தமிழ்நாட்டு அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநராக (2014 நிலவரப்படி) உள்ளார்.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads