திருவாரூர் பக்தவத்சலம்

தமிழக மிருதங்க இசைக்கலைஞர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருவாரூர் பக்தவத்சலம் (பி. நவம்பர் 25)[1] தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் [2] ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை

பக்தவத்சலம் ஆரம்பகால இசைப் பயிற்சியினை தனது மாமா திருவாரூர் டி. ஆர். கிருஷ்ணமூர்த்தியிடம் பெற்றார். தொடர்ந்து தனது தாயார் டி. ஆர். ஆனந்தவல்லியிடம் இசையினைக் கற்றார்.

தொழில் வாழ்க்கை

மதுரை சோமு, எம். எல். வசந்தகுமாரி, மகாராஜபுரம் சந்தானம், கே. வீ. நாராயணசுவாமி, மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா போன்ற புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார். டி. வி. சங்கரநாராயணன், கே. ஜே. யேசுதாஸ் ஆகியோருக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்து வருகிறார்.

விருதுகள்

  • இசைச் செல்வம், வழங்கியது: முத்தமிழ்ப் பேரவை
  • மிருதங்க வாத்ய மணி
  • மிருதங்க நாத மணி
  • மிருதங்க கலா பாரதி
  • இலய வாத்யா, வழங்கியது: சாம்ராட் இந்தியன் கிளாசிக்கல் மியூசிசியன்ஸ் பெடரேசன், கும்பகோணம்
  • மிருதங்க சக்ரவர்த்தி, வழங்கியது: நெமிலி பால திருபுரசுந்தரி பால பீடம்
  • தாள வித்யாதர சுதா, வழங்கியது: சக்தி அருள் கூடம் நற்பவி, தாம்பரம் (சென்னை)
  • வாழ்நாள் சாதனையாளர் விருது, வழங்கியது: சாந்தி ஆர்ட்ஸ் பவுண்டேசன் (சென்னை)

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads