திருவிஜயமங்கை விஜயநாதேஸ்வரர் கோயில்

இந்தியாவில் கோவில் From Wikipedia, the free encyclopedia

திருவிஜயமங்கை விஜயநாதேஸ்வரர் கோயில்
Remove ads

திருவிசயமங்கை - திருவிஜயமங்கை வியநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற காவிரி வடக்கரையில் அமைந்துள்ள சிவாலயமாகும்.

விரைவான உண்மைகள் திருவிஜயமங்கை விஜயநாதேஸ்வரர் கோயில், பெயர் ...
Remove ads

தல வரலாறு

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன்(விஜயன்) வழிபட்ட தலம். இதனால் ஈசனுக்கு விஜயநாதர் எனபெயர் வந்தது. விஜயமங்கை என்பது கோவில் பெயரே ஊரின் பெயர் கோவந்தபுத்தூர்(கோ கறந்த புத்தூர்). சிவலிங்கத் திருமேனியின்மீது பசு தானே பாலை சுரந்து வழிபட்ட தலம். குருஷேத்திரப் போரின் போது அர்ஜூனன் பாசுபதாஸ்திரம் ஈசனிடம் பெற வேண்டி இவ்வாலயத்தில் கடும் தவம் செய்தார். பாசுபதாஸ்திரத்தை அர்ஜூனன் பெற்றால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த துரியோதனன் முகாசுரன் என்பவனை அனுப்பி தவத்தைக் கலைக்கச் சொன்னான். முகாசுரன் பன்றியின் உருவெடுத்து அர்ஜூனனைத் தாக்க பாய்ந்த போது பக்தனை காப்பாற்ற நினைத்த ஈசன் வேடன் உருகொண்டு பன்றியைக் கொன்றார். பன்றியை கொன்றது குறித்து சொற்போரும் விற்போரும் நடந்தது. அர்சுனன் வில் முறிந்தது. முறிந்த வில் கொண்டு வேடன்முடி நோக்கி அம்பு எய்தார் முடியில் பட்ட அம்பு, உலக உயிர்கள் அனைத்தின் மீதும் பட்டது. அர்ஜுனன் முன் இறைவன் தோன்றினார். அர்ஜுனன் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு பணிந்தார். ஈசன் விஜயனான அர்ஜூனனுக்கு பாசுபதாஸ்திரத்தை அருளினார். இன்றும் இவ்வாலய லிங்கத் திருமேனியில் அம்பு பட்ட தழும்பு கோடு போல் காணப்படுகிறது. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தொழ வரும்பொழுது கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனவே தென்கரையில் இருந்தபடியே பதிகம் பாடினர். அப்போது இவர்களுக்கு காட்சி தரும் பொருட்டு விநாயகரும் முருகப்பெருமானும் தெற்கு நோக்கி திரும்பினர். இன்றும் இவ்வாலய விநாயகரும் முருகரும் தென்திசை நோக்கி இருப்பதைக் காணலாம்.

Remove ads

அமைவிடம்

இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 47வது சிவத்தலமாகும்.

கோயில் அமைப்பு

நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் பலிபீடம், நந்தி காணப்படுகின்றன. அடுத்து விநாயகர் உள்ளார். தொடர்ந்து உள்ளே செல்லும்போது மண்டபத்தில் வலப்புறம் நால்வர் சன்னதியும், இடப்புறம் நவக்கிரக சன்னதியும் உள்ளன. அடுத்து மங்கைநாயகி சன்னதி உள்ளது. மூலவர் கருவறைக்கு முன்பாக விநாயகர், முருகன் இரு புறங்களிலும் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

வழிபட்டோர்

அர்ச்சுனன் (விஜயன்) வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

தினமலர்க்கோயில்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads