திருவிதாங்கூர் மகாராஜாக்கள்
இந்தியாவின் திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஆட்சியாளரின் முதன்மைப் பட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவிதாங்கூர் மகாராஜாக்கள் (Maharajas of Travancore) என்பது இந்தியாவின் கேரளாவின் தெற்குப் பகுதியில் இருந்த திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஆட்சியாளர்களின் முதன்மைப் பட்டமாகும். திருவிதாங்கூர் மகாராஜா 1949 வரை திருவிதாங்கூர் இந்தியாவுடன் இணைக்கப்படும் வரை திருவிதாங்கூரின் தலைசிறந்த ஆட்சியாளராக இருந்தார். அப்போதிருந்து, திருவிதாங்கூர் மகாராஜா ஒரு பெயரிடப்பட்ட பதவியாக இருக்கிறது.
திருவிதாங்கூர் இராச்சியத்தின் மகாராஜாக்கள்
Remove ads
மகாராஜா பட்டம்
1947-இல் இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, மகாராஜா சித்திரை திருநாள் தனது மாநிலத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க ஒப்புக்கொண்டார். திருவிதாங்கூர் அண்டை நாடான கொச்சி மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. சித்தரை திருநாள் திருவிதாங்கூர்-கொச்சி ஒன்றியத்தின் "இராஜ்பிரமுகராக" 1 ஜூலை 1949 முதல் 31 அக்டோபர் 1956 வரை பணியாற்றினார். நவம்பர் 1, 1956 அன்று, திருவிதாங்கூர்-கொச்சியின் மலையாள மொழி பேசும் பகுதிகளை அண்டை மாநிலமான சென்னை மாகாணத்துடன் இணைத்து கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. அத்துடன் சித்திரை திருநாளின் "ராஜ்பிரமுக்" அலுவலகம் முடிவுக்கு வந்தது. 28 டிசம்பர் 1971 அன்று, இந்திய அரசாங்கம் பழைய சமஸ்தானங்களின் ஆட்சியாளர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ததால், சித்திரை திருநாள் தனது தனிப்பட்ட பணபலன்கள் மற்றும் பிற சலுகைகளை இழந்தார். அன்றிலிருந்து திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் தலைவரே ஒழிக்கப்பட்ட பட்டத்தைத் தாங்கி நிற்கிறார். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் தொடர்பான சடங்குகளில் திருவிதாங்கூர் மகாராஜாவாக தனது கடமைகளை நிறைவேற்றுகிறார். 2012 ஆம் ஆண்டு, கேரள உயர் நீதிமன்றம் "முஜீபா ரஹ்மான் எதிர் கேரள மாநிலம்" என்ற வழக்கு மீதான தீர்ப்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் 26-வது திருத்தத்தின் மூலம் இந்திய மாநிலங்களின் ஆட்சியாளர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் பறிக்கப்பட்ட 363-வது பிரிவு நீக்கப்பட்டது. இன்னும் ஆட்சியாளர்களின் பெயரும் பட்டமும் அப்படியே உள்ளது. பெயர்கள் மற்றும் பட்டங்கள் அரசியலமைப்பின் 291 மற்றும் 362 வது பிரிவுகளின் கீழ் உரிமைகள் அல்லது சலுகைகள் என்று கருதப்படாததால் அது பாதிக்கப்படவில்லை. எனவே பட்டங்கள் அரசால் ஒழிக்கப்படவில்லை; அவர்களின் அரசியல் அதிகாரங்களும் பணப்பலன்கள் பெறும் உரிமை மட்டுமே ரத்து செய்யப்பட்டது.[2] [3]
Remove ads
மேலும் பார்க்கவும்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads