திருவெண்காடு
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவெண்காடு தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழி வட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்.[3] இங்குள்ள சுவேதாரண்யேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப்பெற்றுள்ளது. இக்கோயில் நவக்கிரகத் தலங்களில் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது.
சைவ சித்தாந்த முதல் சந்தான ஆசாரியார் மெய்கண்டார் பிறந்த ஊர். சைவ எல்லப்ப நாவலர் பிறந்த இராதா நல்லூர் இந்த ஊரிலிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ளது. திருவெண்காட்டுப் புராணம் என்னும் நூல் இவ்வூர் இறைவன்மீது பாடப்பட்டது.[4]
Remove ads
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருவெண்காட்டில் 7403 மக்கள் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 1005. எழுத்தறிவு பெற்றவர்கள் 4948 பேர். இதில் 2733 பேர் ஆண்கள்; 2215 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 75.67. 13.21 சதவீதம் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads