திரைப்பட விநியோகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திரைப்பட விநியோகம் (Film distribution) என்பது ஒரு திரைப்படத்தை பார்வையாளர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் செயல்முறையாகும். இது பொதுவாக ஒரு தொழில்முறை சார்ந்த திரைப்பட விநியோகஸ்தரின் பணியாகும். இவர் படத்திற்கான சந்தைப்படுத்தல் முறையை தீர்மானிப்பார். மற்றும் ஒரு படம் காட்சிப்படுத்தப்பட வேண்டிய அல்லது பார்க்கக் கூடிய ஊடகங்கள் மற்றும் வெளியீட்டு தேதி மற்றும் பிற விஷயங்களை நிர்ணமிப்பார்.
திரையரங்கு அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது தனிப்பட்ட (டிவிடி, கோரிய நேரத்து ஒளிதம், பதிவிறக்கம், தொலைக்காட்சி நிகழ்ச்சி) போன்ற வகைகள் மூலம் படம் நேரடியாக பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படலாம். வணிகத் திட்டங்களைப் பொறுத்தவரை திரைப்பட விநியோகம் என்பது பொதுவாக திரைப்பட விளம்பரத்துடன் சார்ந்தே இருக்கும். தற்காலத்தில் திரைப்படங்கள் நேரடியாக நெற்ஃபிளிக்சு,[1] அமேசான்.காம், டிஸ்னி+,[2] எம்எக்ஸ் பிளேயர், ஹாட் ஸ்டார் போன்ற பல ஓடிடி தளத்தில் விநியோகம் செய்யப்படுகிறது.[3]
திரைப்படத்திற்காகவே குறிப்பாக வடிவமைக்கப்பட்ட முதல் திரையரங்கம் என்பது விவாதத்திற்குரியது. திரைத்துறை சார்ந்தவர்களின் கருத்து 1902 இல் டாலியின் எலக்ட்ரிக் தியேட்டர் லாஸ் ஏஞ்சல்ஸில் நிறுவப்பட்டது[4] எனவும் மற்றும் பிட்ஸ்பர்க்கின் நிக்கலோடியோன் 1905 இல் நிறுவப்பட்டது[5] என இரு வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads