திறக்கோயில்

From Wikipedia, the free encyclopedia

திறக்கோயில்
Remove ads

திறக்கோயில் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் தாலுகாவில் உள்ள ஒரு கிராமமாகும். இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும். இது ஒரு சமணத்தலமாகும். இங்குள்ள மலைக்கு கீழே சுமார் 25அடி உயரத்தில் ஒரு தனி பாறையில் நான்கு சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது.[1]

விரைவான உண்மைகள் திறக்கோயில், அமைவிடம் ...
Remove ads

சொற்பிறப்பியல்

பாறை என்று பொருள்படும் துருகல் என்ற வார்த்தையிலிருந்து இந்த கிராமம் இப்பெயரைப் பெற்றதாக நம்பப்படுகிறது. பின்னர் இது திறக்கோல் என திருகி, பின்னர் திறக்கோயில் என மருவியிருக்கலாம்.

Thumb
செதுக்கப்பட்டக் குகை

அமைவிடம்

வந்தவாசியின் தென்மேற்கில், 15 கி. மீ தொலைவிலும் பொன்னூரின் தத்துவ மையத்திலிருந்து 7 கி. மீ. தொலைவிலும் திறக்கோயில் ஊர் அமைந்துள்ளது. திறக்கோயில் மலையானது 1 கி. மீ., வடகிழக்கு திசையில் உள்ளது.

போக்குவரத்து

மழையூர் - தேசூர் - கீழ்புதுார் ஆகிய இடங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் இருக்கின்றன.திறக்கோவில் சாலை சந்திப்பிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த சிறிய கிராமம் அமைந்துள்ளது.

திறக்கோயில் மலை மற்றும் திகம்பர சமணக் கோயில்

திறக்கோயில் மலையில் இயற்கையாக உருவான மூன்று சிறிய குகைகள் உள்ளன. அதில் ஒன்று மலையின் தென்பகுதியின் மையத்திலும் மற்ற இரண்டு மலைக்கு மேற்கு மற்றும் கிழக்கு பக்கங்களிலும் உள்ளன. இந்த குகைகள் பொ.ஊ. 8 ஆம் நூற்றாண்டில் சமணத் துறவிகளால் சமண பள்ளியாக பயன்படுத்தப்பட்டது. இக்குகைகள் ஒரே கல்லால் 25 அடி உயரம் உடையதாகும். நான்கு பக்கங்களிலும் நன்றாக செதுக்கப்பட்ட நான்கு தீர்த்தங்கரர் சிலைகள் (மகாவீரர், பார்சுவநாதர், ரிஷபநாதர், சந்திரநாதர்) உள்ளன. பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டுவரை தண்டபுரம் என அழைக்கப்பட்டது. முதலாம் இராஜராஜ சோழனின் பொ.ஊ. 1007 கல்வெட்டுகள், இந்தக் குகையின் வாழ்விடங்களை சங்கரைப் பள்ளி மற்றும் மை சுத்தப் பள்ளி என குறிப்பிடுகிறது. இங்கு சமீபத்தில் கட்டப்பட்டுள்ள கோயிலில் மகாவீரர் சிலை வழிபாடு நடைபெறுகிறது. இக்கோயில் வளாகம் முழுவதும் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது.[2]

Thumb
பழைய மற்றும் புதிய படிகள்
Remove ads

காட்சிப்பதிவுகள்

மேற்கோள்கள்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads