தில்லைக் கலம்பகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தில்லைக் கலம்பகம் [1] என்னும் சிற்றிலக்கியம் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டையர் பாடிய நூல்களில் ஒன்று, இவர்கள் திரு ஆமாத்தூர்க் கலம்பகம் என்னும் கலம்பக நூலும் பாடியுள்ளனர். தில்லைக் கலம்பகம் தில்லையில் குடிகொண்டுள்ள நடராசப் பெருமான் மீது பாடப்பட்டது. காப்பு வெண்பாவும் 100 பாடல்களும் இதில் உள்ளன.
சிவபெருமான் சிறப்பு, தில்லையை வழிபட்டோர், பஞ்சபூத தலம், நடனமாடிய சபைகள் முதலானவை இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. மற்ற தலங்களுக்கு உரிய பூசாபத்ததி [2] காமிகாகமம் [3]. இத் தலத்துக்கு உரிய பத்ததி மகுடாகமம் [4] [5] தில்லையின் நான்கு கோபுரங்கள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. [6]
Remove ads
- துரை - ஆங்கிலேயனைக் குறிக்கும் 'துரை' என்னும் சொல் இந்த நூலில் வருகிறது. [7]
- பயல் - பையல் என்னும் சொல்லே பழமையானது. 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பிங்க நிகண்டில் பையல் என்னும் சொல் வருகிறது. புகழேந்திப் புலவர் பூசலில் ஒட்டக்கூத்தர் இச்சொல்லைக் கையாண்டுள்ளார். [8] இந்தக் கலம்பகத்தில் இச்சொல் கீழ்மகனைக் குறிக்கும் சொல்லாகப் 'பயல்' என மருவி வருகிறது.
- கப்பல் - கப்பல் என்னும் சொல் இந்த நூலில் உள்ளது. [9] கண்ணுடைய வள்ளல் (1375-1425) தம் ஒழிவிலொடுக்கம் என்னும் நூலில் இச் சொல்லை கையாண்டுள்ளார். [10]
இவற்றால் இந்த நூலின் காலம் புலப்படுகிறது.
Remove ads
சீர்காழி சிற்றம்பல நாடிகள் சீர்காழியில் பல மாணவர்களுடன் இருந்துகொண்டு சைவப் பயிர் வளர்த்துவந்தார். இவரது முதல்-மாணவர் சம்பந்த முனிவர். இவர் தன் உடலை எரிக்கவோ, சுடவோ வேண்டாம் என்று கூறியவர். இவர்களை அறிந்திருந்த இந்த இரட்டையர் இந்தக் கலம்பகத்தில் பாடியுள்ளனர்.
- பழுத்துச் செத்தாலும் பிறந்து செத்தாலும் இப் பாழ் உடலம்
- கொழுத்துச் செத்தாலும் மெலிந்து செத்தாலும் கொலைப் படினும்
- புழுத்துச் செத்தாலும் புதைத்தாலும் காலில் புரியைக் கட்டி
- இழுத்துச் செத்தாலும் சிதம்பரத்தே சென்று இறத்தல் நன்றே.
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads