தமிழில் சிற்றிலக்கியங்கள்
தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ் இலக்கியத்தில் சிற்றிலக்கியம் என்பது தெய்வங்களையும், தமிழ்ப் பெரியோர்களையும் குழந்தையாகக் கருதி, அவர்களைப் புகழ்ந்து பாடுவதாகும்.[1] சிற்றிலக்கியத்தின் இலக்கணம்:
- சிற்றிலக்கியம் பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை அளவில் சுருங்கியதாக அமைவது.
- அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.
- பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.
- அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம்.
இவ்வகையில் பள்ளு, தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி, பரணி, அந்தாதி, மடல் போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் என்ற வகைமையுள் அடங்கும். சிற்றிலக்கியங்கள் வடமொழியில் பிரபந்தங்கள் எனப்படுகின்றன. பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றைக் குறிக்கும் ஒரு பொதுப்பெயர் ஆகும். சமக்கிருதத்தில் பிரபந்தம் என்னும் சொல், "கட்டப்பட்டது" எனப் பொருள்படும்.
Remove ads
சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை
சிற்றிலக்கியவகைகளின் எண்ணிக்கை தொண்ணூற்றாறு என மரபாக கூறப்படுகிறது. இந்த தொண்ணூற்றாறு வகைகளையும் தாண்டி பலவகை சிற்றிலக்கியங்கள் வளர்ந்தும் விரிந்தும் தொண்ணூற்றாறு என்ற எண்ணிக்கைக் கடந்து பிற்காலத்தில் கூடிவிட்டது. இதன் எண்ணிக்கை குறித்து அறிஞர்களிடையே கருத்து மாறுபாடு உள்ளது. இந்த எண்ணிக்கையானது குறைந்தபட்சம் 186 என்றும் அதிகப்பட்சமாக 417 என்றும் கூறப்படுகிறது.
சிற்றிலக்கிய வகைகள்
- அகப்பொருட்கோவை
- அங்கமாலை
- அட்டமங்கலம்
- அரசன்விருத்தம்
- அலங்காரபஞ்சகம்
- அனுராகமாலை
- ஆற்றுப்படை
- இணைமணி மாலை
- இயன்மொழி வாழ்த்து
- இரட்டைமணிமாலை
- இருபா இருபது
- உலா
- பவனிக்காதல்
- உலாமடல்
- உழத்திப்பாட்டு
- உழிஞைமாலை
- உற்பவமாலை
- ஊசல்
- ஊர் நேரிசை
- ஊர்வெண்பா
- ஊரின்னிசை
- எண்செய்யுள்
- ஐந்திணைச் செய்யுள்,
- ஒருபா ஒருபது
- ஒலியந்தாதி
- கடைநிலை
- கண்படைநிலை
- கலம்பகம்
- காஞ்சிமாலை
- காப்புமாலை
- குழமகன்
- குறத்திப்பாட்டு
- கேசாதிபாதம்
- கைக்கிளை
- கையறுநிலை
- சதகம்
- சாதகம்
- சிறுகாப்பியம்
- சின்னப்பூ
- செருக்களவஞ்சி
- செவியறிவுறூஉ
- தசாங்கத்தயல்
- தசாங்கப்பத்து
- தண்டகமாலை
- தாண்டகம்
- தாரகைமாலை
- தானைமாலை
- எழுகூற்றிருக்கை
- தும்பைமாலை
- துயிலெடை நிலை
- தூது
- தொகைநிலைச்செய்யுள்
- நயனப்பத்து
- நவமணிமாலை
- நாமமாலை
- நாழிகைவெண்பா
- நான்மணிமாலை
- நானாற்பது
- நூற்றந்தாதி
- நொச்சிமாலை
- பதிகம்
- பதிற்றந்தாதி
- பரணி
- பல்சந்தமாலை
- பன்மணிமாலை
- பாதாதிகேசம்
- பிள்ளைக்கவி
- புகழ்ச்சி மாலை
- புறநிலை
- புறநிலைவாழ்த்து
- பெயர் நேரிசை
- பெயரின்னிசை
- பெருங்காப்பியம்
- பெருமகிழ்ச்சிமாலை
- பெருமங்கலம்
- போர்க்கெழுவஞ்சி
- மங்கலவள்ளை
- மணிமாலை
- முதுகாஞ்சி
- மும்மணிக்கோவை
- மும்மணிமாலை
- முலைப்பத்து
- மெய்க்கீர்த்திமாலை
- வசந்தமாலை
- வரலாற்று வஞ்சி
- வருக்கக் கோவை
- வருக்கமாலை
- வளமடல்
- வாகைமாலை
- வாதோரணமஞ்சரி
- வாயுறைவாழ்த்து
- விருத்தவிலக்கணம்
- விளக்குநிலை
- வீரவெட்சிமாலை
- வெட்சிக்கரந்தைமஞ்சரி
- வேனில் மாலை
மற்றும்
போன்றனவும் உண்டு
Remove ads
மூலம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads