தி. சு. சதாசிவம்

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads


தி. சு. சதாசிவம் (மார்ச் 15, 1938 - பெப்ரவரி 5, 2012) தமிழக எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், நடிகரும் ஆவார். கலை, இலக்கியம், முற்போக்கு அரசியல் இயக்கங்கள் என்று பல துறைகளில் அறியப்பட்டவர். பல திரைப்படங்களிலும், பத்துக்கு மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார். 1997-இல் சாரா அபுபக்கரின் சந்திரகிரி ஆற்றங்கரையில் என்ற புகழ்பெற்ற கன்னடப் புதினத்தை மொழிபெயர்த்ததற்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

சதாசிவம் தமிழ்நாடு, திருப்பத்தூரில் பிறந்தார். இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் தம் வாழ்க்கையின் பெரும்பகுதியை பெங்களூரில் கழித்தார். அவருக்கு மனைவியும் இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

மொழிபெயர்ப்புத் துறையில்

கன்னடம், மலையாளம், ஆங்கிலம், இந்தி எனப் பல மொழிகளில் இருந்து 25க்கு மேற்பட்ட அவரது மொழிபெயர்ப்புகள் தமிழில் நூல்களாக வெளிவந்திருக்கின்றன. யூ. ஆர். அனந்தமூர்த்தி, சிவராம காரந்த், மொகல்லி கணேஷ், சந்திரசேகர கம்பார், லங்கேஷ் போன்ற முக்கியமான கன்னட எழுத்தாளர்கள், பெர்டோல்ட் பிரெக்ட், அகிரா குரசோவா போன்ற பன்னாட்டு ஆளுமைகளின் படைப்புகளைச் சதாசிவம் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

திரைப்படத் துறையில்

கடந்த 15 ஆண்டுகளாக அவர் நடிப்பிற்குத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். பல திரைப்படங்களில் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் பத்துக்கு மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்திருக்கிறார். மர்மதேசம், விடாது கருப்பு, அண்ணாமலை, கோலங்கள் உள்ளிட்ட பிரபல தொடர்களில் அவர் முக்கியமான பாத்திரங்களில் நடித்தார்.

சமூக சேவை

சதாசிவம் இடதுசாரி கலை-இலக்கிய வட்டங்களிலும் தமிழ்த்தேசிய, தலித் இயக்கங்களிலும் முனைப்புடன் பங்கேற்றார்.

எழுதிய சில நூல்கள்

  • ரஷோமான் (மொழிபெயர்ப்பு, 2007)
  • தலித் இலக்கியத்தின் போக்கும், வளர்ச்சியும் (2003)
  • ஒரு கிராமத்தின் சித்திரம்
  • அகிரா குரோசவா
  • காலச்சிற்பியின் கைகளில் (மலையாள மொழிபெயர்ப்பு)
  • சம்ஸ்காரா (கன்னடப் புதினம், மொழிபெயர்ப்பு)
  • அந்தரத்தில் நின்ற நீர்
  • திருசம்பிகை (1998)
  • தாழம்பூ: தலித் சிறு கதைகள் (2002)
  • கர்வாலோவின் தேடல் (2008)
  • தண்ணீர் சந்தைக்கல்ல மக்களுக்கே (2005)
  • கடவுளின் குறும்புகள் (2008)
  • சோமனின் உடுக்கை

விருதுகள்

  • சாகித்ய அகாதமி விருது
  • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது (1998)
  • நல்லி திசை எட்டும் விருது (2006)
  • நெய்வேலி புத்தக விழா அமைப்பு அளித்த வாழ்நாள் சாதனை விருது (2007)
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads