தீக்கல் இயக்கம் (சுடுகலன்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தீக்கல் இயக்கம் (ஆங்கிலம்:flintlock mechanism, ஃப்ளின்ட்லாக் மெக்கானிசம்) என்பது 17-ல் இருந்து 19-ஆம் நூற்றாண்டுகள் வரை மசுகெத்துகள், கைத்துப்பாக்கிகள், மற்றும் புரிதுமுக்கிகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகையான இயங்குமுறை ஆகும். இந்த முறையில் சுடும் துப்பாக்கிகளை, "தீக்கல்லியக்கி" என்பர்.


இது திரியியக்கிகள், சக்கரயியக்கிகள் போன்ற முந்தைய தொழில்நுட்பங்களை விரைவில் வழக்கொழிய செய்தது. மூடியடி இயக்கம் அறிமுகம் ஆகும் வரை, இது இரண்டு நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் இருந்தவை.[1]
Remove ads
வரலாறு
சொடுக்கொலி இயக்கம், மற்றும் சொடுக்குஞ்சேவல் போன்று, தீக்கல்லை பயன்படுத்தும் சுடும்-இயக்கங்கள் 16-ம் நூற்றண்டில் தோன்றின. இருப்பினும், இதில் குறிப்பிடப்படும் அசல் தீக்கல்லியக்கம் ஆனது, 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரான்சில் தோன்றியது. இது தோன்றிய காலம் தெரியாது, ஆனால், அசல் தீக்கல்லியக்கியை உருவாக்கிய கௌரவம் மறென் லெ பூர்ஷுவாவையே[2] சேரும்.
செங்குத்து நிலையில் செயல்படும் பிடிப்பானை மறென் லெ பூர்ஷுவா இதில் சேர்த்தது தான், இதன் முக்கிய அம்சமே ஆகும். பிடிப்பான் தான் ஒரு இயங்குமுறையை, சுடுவதற்கு தயார் நிலையில் வைக்கும்; விசை அதன்மீது இயங்கி, அதை விடுவித்து, ஒரு வலுவான சுருள்வில்லை இயங்குமுறையில் இயக்கி துப்பாக்கியை சுடச்செய்கிறது. முன்னதாக, பிடிப்பான் இயக்கத் தகடிற்கு உள்ளேயுள்ள ஒரு துளை வழியாக செயல்பட்டு, இயக்கத் தகடிற்கு வெளியே இருக்கும் சுத்தியலை சுடச்செயும். செங்குத்து நிலையில் செயல்படும் பிடிப்பானின் வடிவம், விலை மலிவாகவும், நம்பகத்தன்மையுடனும் இருந்தது.
Remove ads
வடிவமைப்பும் செயல்பாடும்
தீக்கல்லியக்கத்தின் கூறுகள்
தீக்கல்லியக்க சுடுதலின் நகர்படம்
வழக்கமான தீக்கல் இயக்கமானது, ஒரு குறுகிய சுத்தியலின் முனையில், பற்றுகுறடுகளுக்கு இடையில் ஒரு தீக்கற்துண்டை கொண்டிருக்கும். இந்த சுத்தியல் "இழுபட்ட" நிலையில் வைக்க பின்னால் இழுக்கப்படும். விசை இழுக்கப்படுவதால் விடுவிக்கப்படும், சுருள்வில்-பூட்டிய சுத்தியல் முன்னால் நகர்ந்து, "தகட்டுமூடி" எனப்படும் எஃகுத் துண்டின்மேது தீக்கல் மோதும். அதேவேளை, சுத்தியலில் நகர்வு, தகட்டுமூடியை பின்னால் தள்ளி, வெடிமருந்தை கொண்டிருக்கும் கிண்ணியை திறக்கும். தீக்கல் தகட்டுமூடியை அடித்து உண்டாகும் தீப்பொறி, கிண்ணியில் விழுந்து, துகளை பற்றவைக்கும். எரியும் சுவாலை, ஸ் சிறு துளை வாயிலாக துமுக்கிக் குழலை அடைந்து, அதிலிருக்கும் முதன்மை வெடிமருந்தை தீமூட்டி, ஆயுதத்தை வெடிக்கச் செய்யும்.
பல சுத்தியல்கள், மறென் லெ பூர்ஷுவாவின் வடிவப்பை பின்பற்றி, அரை-இழுபட்ட நிலையை கொண்டிருந்தன, இதுவே "தீங்குறாத" நிலை ஆகும். ஏனெனில் சுத்தியல், இந்த நிலையில் இருக்கும் வரை, துப்பாக்கி வெடிக்காது. இந்த நிலையில், தகட்டுமூடியை திறக்கவும் முடியும், மற்றும் வெடிதுகள்களை கிண்ணியில் இடவும் முடியும். பிறகு தகட்டுமூடி மூடப்பட்டு, சுத்தியல் "முழு-இழுபட்ட" நிலைக்கு பின்னிழுக்கப்படும். "முழு-இழுபட்ட" நிலையில் வைத்து தான் துப்பாக்கியை சுட இயலும்.
Remove ads
முன்னிருந்த வடிவங்களுடனான ஒப்பீடு
- திரியியக்கிகளை போல், எந்த நேரமும் வீரர்கள் எரியும் திரியை ஏந்தும் அவசியமில்லை. இதை வெடிக்கச்செய்ய தனியாக எரியும் திரி தேவையில்லை. ஒப்பீட்டளவில் இது மழை காலங்களில் நன்கு கைகொடுக்கும்
- சக்கரயியக்கம் போல் இதன் உற்பத்தி, உயர்ந்த விலையுடையது அல்ல. இதன் உற்பத்திக்கு, பெரியளவிலான உலோகவியல் மற்றும் இயந்திரவியல் அறிவு எதுவும் தேவையில்லை.
- சொடுக்கொலி இயக்கத்தை போல; "மூடியிடப் பட்டிருக்கும் கிண்ணி, சுடுநரால் சுடுவதற்கு முன்பாக திறக்கப்படவேண்டும்" என்ற அவசியம் இல்லை. இதில் விசை இழுக்கப்படும் போது, தானாகவே கிண்ணிமூடி திறக்கும்.
- சொடுக்குஞ்சேவலில் உள்ளதைவிட, இந்த சுடும் இயங்குநுட்பம் குறைவான பாகங்களை / கூறுகளைக் கொண்டுள்ளது; கிண்ணிமூடியும் எஃகுத்தகடும் ஒருங்கிணைந்த பாகம் / கூறு ஆக உள்ளது. இதனால், உற்பத்தி செலவு மேலும் குறையும்.
தீக்கற்கள்
துமுக்கிக்கல் என்பது, தீக்கல்லியக்கியின் பற்றுகுறடில் பொருந்தகூடிய, ஆப்பு-வடிவத்தில் செதுக்கப்பட்ட தீக்கல் ஆகும். துமுக்கிக்கற்களை நகராமல் நிலைநிறுத்த; அவை ஈயம், அல்லது பதனிட்ட தோலால் சுற்றப்படும்.[3][4] இவை பல ஆயுதங்களுக்கு ஏற்றாற்போல், பல அளவுகளில் செய்யப்பட்டும்.[5] தாது அகேட் துகள்களை தீக்கல்லுக்கு, மாற்றாக பயன்படுத்தலாம். ஆனால் இதை வெட்டுவதற்கு கடினமாகவும், அதிகவிலை பிடிப்பது, ஆகிய காரணத்தால்; தீக்கற் படிமங்கள் இல்லாத ப்ருசியா போன்ற நாடுகளில் மட்டும் தான் பயன்படுத்தப்பட்டது.
ஒரு திறன்மிகுத்த வினைஞரால், நாளொன்றுக்கு பல்லாயிரம் துமுக்கிக்கற்களை செய்ய முடியும்.[5]
போர்க்காலங்களில், இலட்சக் கணக்கில் துமுக்கிகற்களின் தேவை ஐக்கிய இராச்சியத்தில் இருந்தது. இங்கிலாந்தின் பிரான்டன் நகரில் தீக்கல்லை வெட்டுவதும், செதுக்குவதும் குடிசைத்தொழிலாகவே மாறியது.
எளிதில் செயலற்று போகாதவையாக, பிரான்டன் துமுக்கிக்கற்கள் பார்க்கப்பட்டது.[6]
Remove ads
பீரங்கி இயக்கம்
பீரங்கியை சுடவைத்த தீக்கல்லியக்கம் தான், பீரங்கி இயக்கம் ஆகும். கப்பற் பீரங்கிகளில் இது குறிப்பிடத்தக்க புதுமை ஆகும். 1745-ல் அரச கடற்படையில் முதலில் இதை பயன்படுத்தப்பட்டது. பழைய பீரங்கிகளில் இதனை பொருத்த முடியாத காரணத்தால், இதன் பயன்பாடு மெதுவாகவே பரவியது.
வெடிதுகள்கள் நிரப்பபட்ட, பீரங்கியின் தொடுதுளையில், தீக்கோலை - எரியும் திரியை, ஒரு முனையில் கொண்டிருக்கும் கோல் - இட்டு தான் முதலில் பீரங்கிகள் சுடப்பட்டன. இது ஆபத்தானது மட்டுமல்லாமல், நகரும் கப்பலில் இருந்து, குறிபார்த்து சுடுவதை இயலாதாக்கியது , ஏனெனில் பின்னுதைப்பை தவிர்க்க, கப்பல் நின்றுகொண்டிருக்கும் போது, பக்கவாட்டில் இருந்துதான் பீரங்கி சுடப்பட வேண்டியிருந்தது. மேலும் தீக்கோல் இடுதலுக்கும், பீரங்கி வெடிப்பதற்கும் இடையே காலதாமதம் இருந்தது.[7]
ஒரு பற்றுக்கயிறை இழுப்பதன் மூலம், பீரங்கியியக்கம் இயக்கப்படுகிறது. பீரங்கியை குண்டேற்றுவதை, பீரங்கியியக்கம் விரைவாக்கியது, பாதுகாப்பாக்கியது.
பீரங்கியியக்கத்தின் அறிமுகத்திற்கு பின்பும்கூட தீக்கோல்களை வைத்திருந்தனர், ஆனால் அவசரக்கால பயன்பாட்டிற்காக மட்டும் தான்.
Remove ads
மேலும் பார்க்க
வெளி இணைப்புகள்
- How the flint lock works (ஆங்கிலம்)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads