சொடுக்குஞ்சேவல் (சுடுகலன் இயக்கம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சொடுக்குஞ்சேவல் (ஆங்கிலம்: snaphaunce, ஸ்னாப்ஹான்சு) என்பது துப்பாக்கியை வெடிக்கச் செய்யும் ஒர் இயங்குமுறை ஆகும். இந்த இயங்குமுறையை பயன்படுத்தும் துப்பாக்கியையும் இதே பெயரால் தான் அழைப்பர்.[1] இதன் பெயர், டச்சு மொழியில் இருந்து வந்தது, ஆனால் இதன் இயங்குமுறைக்கும் நெதர்லாந்திற்கும் நிச்சயமாக சம்பந்தம் இல்லை. இது சொடுக்கோலி இயக்கத்தில், சக்கர இயங்குநுட்பத்தை சேர்த்ததால் உருவானது. ஓர் தீக்கல், கிண்ணியின் மேலிருக்கும் தகட்டில் அடிப்பதால், ஏற்படும் தீப்பொறியைக் கொண்டு, எரியூட்டித் துகள்களை பற்றவைத்து, துப்பாக்கியை வெடிக்கச் செய்யும் இயங்குநுட்பம் ஆகும்.[2] ஐரோப்பா, வட ஆப்ரிக்கா, மற்றும் மத்திய கிழக்கில் இந்த வகை சுடுகலன் இருந்தன.

Remove ads
வடிவமைப்பு

இதற்கு முந்தைய சொடுக்கியக்கம் போன்றும், பிந்தைய தீக்கல்லியக்கம் போன்றும், சொடுக்குஞ்சேவலிலும் தீக்கல்லை எஃகில் அடிப்பதால் கிளம்பும் தீப்பொறியைக் கொண்டு தான் முதன்மை உந்துபொருள் பற்றவைக்கபடும்.
சுத்தியல் எனப்படும் ஒரு வளைந்த நெம்புகோலின் முனையில் உள்ள பற்றுக்கருவியில் தீக்கல் இருக்கும். விசையை இழுக்கையில், சுருள்வில்லின் அழுத்தத்தில் இருந்த, இது (சுத்தியல்) முன்னோக்கி நகர்ந்து, வளைந்த (கடினமூட்டப்பட்ட) எஃகு தகட்டில் அடித்து, தீப்பொறியை உண்டாக்கும். இவை (தீப்பொறிகள்) எரியூட்டித் துகள்களை கொண்டிருக்கும் கிண்ணியில் விழும். பற்றவைக்கப்பட்ட எரியூட்டியின் தீயானது, குழலின் பிற்பகுதியிலுள்ள சிறு துளை வழியாக, சுடும் அறைக்குள் இருக்கும் முதன்மை வெடிபொருளை பற்றவைக்கும்.
முந்தைய சொடுக்கியக்கத்தின் மேம்பாடாக சொடுக்குஞ்சேவல், 1550-களின் பிற்பகுதியில்; ஜெர்மனி, எசுப்பானியம், ஹாலாந்து, ஸ்காட்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளில் முதலில் தோன்றியதாக கருதப்படுகிறது.[3]
சொடுக்கியக்கிகளிலும், திரியியக்கிகளில் உள்ளது போல, சுடுநரின் கையால் நகர்த்தப்படும் கிண்ணிமூடி தான் இருந்தது. முக்கியமான மேம்பாடு எதுவென்றால், சக்கரயியக்கத்தை போல், சொடுக்குஞ்சேவலில் கிண்ணிமூடி தானாகவே திறக்கும் இயங்குமுறை இருந்தது.
மேலும் சக்கரயியக்கிகளை போலவே, பிடிப்பானை பக்கவாட்டில் கொண்டிருந்தது, இந்த சொடுக்குஞ்சேவல்.
Remove ads
பயன்பாடு
1550-களின் பிற்பகுதியில் இருந்து, நவீன காலம் வரை, சொடுக்குஞ்சேவல் பயன்பாட்டில் இருந்தன. வட இத்தாலியை தவிர (1750-கள் வரை இருந்தன), அனைத்து இடங்களிலும் 1680-களிலேயே வழக்கற்று போயின. ஐரோப்பாவில், அதிலும் பிரான்சில், 1620-லேயே சொடுக்குஞ்சேவலின் இடத்தை; எஃகுத்தகடும், கிண்ணிமூடியும் ஒருசேர இருக்கும் தீக்கல்லியக்கிகள் பிடித்து விட்டன. சொடுக்குஞ்சேவலை விட, தீக்கல்லியக்கிகள் விலை மலிவாகவும், சிக்கல் குறைவான வடிவமைப்பையும் கொண்டிருந்தன.
Remove ads
பெயர்
ஸ்னாப்ஹான்சு என்ற பெயர், இடச்சு மொழி வார்த்தையான "Snap Haan"-ல் இருந்து தோன்றியது. "Snap" என்றால் "கொத்து", "Haan" என்றால் "சேவல்" என பொருள். சுத்தியலின் சேவல் தலை வடிவிலும், கீழ்நோக்கிய-நகர்வு சேவல் அதன் உணவை கொத்துவது போன்ற செயல் ஆகியவை, இப்பெயரை இதற்கு பெற்று பெற்றுத்தந்தன.
ஆங்கிலத்தில், "Snap" என்றால் "சொடுக்கு போடுதல்" என பொருள். இந்த துப்பாக்கியை இயக்கும்போது எழும் சப்தம் விரல்களை சொடுக்குவது போல இருப்பதால், இதனை 'சொடுக்கும்+சேவல்=சொடுக்குஞ்சேவல்' என தமிழில் குறிப்பிடலாம்.
மேலும் பார்க்க
புற இணைப்புகள்
- Scottish Snaphance Pistols பரணிடப்பட்டது 2008-01-18 at the வந்தவழி இயந்திரம்
- Dutch Snaphance mechanism பரணிடப்பட்டது 2006-11-12 at the வந்தவழி இயந்திரம் (எசுப்பானியம்)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads