தீர்க்கதமஸ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தீர்க்கதமஸ் (Dīrghatamas) (சமசுகிருதம்: दीर्घतमस्), பரத கண்டத்தின் வேத கால ரிஷிகளில் ஒருவர். இவர் கண் பார்வை அற்றவராக இருந்தாலும் அறிவுக் கூர்மை உடையவராக இருந்தார். ரிக் வேத மந்திரங்களால் தீர்க்கதமஸ் அறியப்படுகிறார். ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் உள்ள 140 முதல் 164 முடிய உள்ள மந்திரங்கள் ரிஷி தீர்க்கதமஸ் பெயரால் அறியப்படுகிறது. மேலும் தீர்க்கதமசின் பெயர் சில உபநிடதங்கள் குறிக்கிறது. அங்கரிசரின் பேரரான தீர்க்கதமசின் தம்பி பிருகஸ்பதி ஆவார். இவர் இவரது மகன்களில் புகழ்பெற்றவர் கௌதமர் ஆவார்.

விரைவான உண்மைகள் தீர்க்கதமஸ், தகவல் ...
Remove ads

வரலாறு

மகாபாரதம் இதிகாசத்தின் ஆதி பருவத்தின் 104வது பகுதியில் தீர்க்கதமசின் வரலாறு பீஷ்மரால் சொல்லப்படுகிறது. தீர்க்கதமஸ் தன் தாயின் கருவில் இருக்கையில், தனது சித்தப்பா பிருகஸ்பதியின் சாபத்தால் கண்பார்வை அற்றவராக பிறக்கிறார். பின்னர் தீர்க்கதமஸ், பிரத்வேஷி எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, கௌதமர் முதலிய குழந்தைகள் பிறக்கின்றனர். செல்வம் அற்ற தீர்க்கதமசை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சேர்ந்து மரக்கட்டையில் கட்டி ஆற்றில் தூக்கி எறிகின்றனர்.

குழந்தை பேறு அற்ற மன்னர் பலி, ஆற்றில் மிதந்து வந்த தீர்க்கதமசை காப்பாற்றி அரண்மனை அழைத்துச் செல்கிறார். தனது மனைவி சுதேஷ்ணையுடன் கூடி, தனது இராச்சியத்திற்கு வாரிசுகள் பெற்றுத் தரும்படி தீர்க்கதமசை கேட்டுக்கொள்கிறார். இராணி சுதேஷ்ணயும், ரிஷி தீர்க்கதமசடன் கூடி அங்கன், வங்கன், கலிங்கன், புண்ட்ரன், சும்ஹன் எனும் ஐந்து குழந்தைகளைப் பெறுகிறாள். [1][2]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads