துக்காராம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
துக்காராம் (Tukaram) பொ.ஊ. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் இந்து ஆன்மீக ஞானியும் சமய சீர்திருத்தவாதியும் ஆவார். இவர் இந்திய மாநிலமாகிய மகாராஷ்டிராவின் புனே நகரத்திற்கு அருகே தேகு சிற்றூரில் பொ.ஊ. 1577-ல் பிறந்தவர். இல்வாழ்வைத் துறந்து பக்தனாகவும், சீர்திருத்தவாதியாகவும் செயல்பட்டார். மராட்டிய மக்களிடம் நாட்டுப் பற்றை வளர்க்க, சிவாஜி காலத்தில் வாழ்ந்த இவரது போதனைகள் உதவின. கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர், வரம்பில்லா ஆற்றல் உடையவர் என்பது இவரது கருத்து. பேரரசர் சிவாஜி இவர் சீடர்களில் ஒருவர். சைதன்யரைப் போன்று பக்திப் பாடல்களை இயற்றியுள்ளார். இவர் விஷ்ணுவின் அவதாரமான விட்டலரின் பக்தர். இவரது பாடல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாமதேவர் என்பவரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார்.[1]
Remove ads
இவரைப் பற்றிய திரைப்படங்கள்
இவரைப் போற்றி, "ப்கத் துக்காராம்" என்ற திரைப்படம் 1937-இல் தயாரிக்கப்பட்டது. இதில் இவரது வாழ்க்கை வரலாறு திரையிடப்பட்டது. 1938இல் துகாராம் என்ற பெயரில் தமிழ்த் திரைப்படம் வெளியானது. 2012 ஆம் ஆண்டிலும், மராத்திய மொழியில் துக்காராம் என்ற பெயரில் திரைப்படம் வெளியானது. 1973இல், தெலுங்கில் பக்த துக்காராம் என்ற பெயரில், இவரைப் பற்றிய திரைப்படம் உருவானது. சந்த துக்காராமா என்ற பெயரில் 1963இல் கன்னடத் திரைப்படம் வெளியானது.
Remove ads
இதனையும் காண்க
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads