புனே மாவட்டம்

மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

புனே மாவட்டம்map
Remove ads

புனே மாவட்டம், இந்திய மாநிலமான மகாராட்டிரத்தில் உள்ளது. இதன் தலைநகரம் புனே இந்திய அளவில், அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட மாவட்டங்களில் இதுவும் ஒன்று. 15,643 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டடத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கட்தொகை 94,29,408 ஆகும். இம்மாவட்டம் 14 தாலுகாக்களும், 22 சட்டமன்றத் தொகுதிகளும், 4 மக்களவைத் தொகுதிகளும் கொண்டது. மகாராட்டிரா மாநிலத்தில் தொழில் வளர்ச்சி மிக்க மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் புனே மாநகராட்சி, பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி மற்றும் பாராமதி, தௌந்து, ஜுன்னர், லோனோவாலா, ஆளந்தி, தப்ஹடே, சஸ்வத், இந்தப்பூர், ஜெஜுரி, சிரூர்என என 10 நகராட்சிகளும் கொண்டது. இம்மாவட்டம் லவாசா எனும் ஒரு தனியார் நகரத்தைக் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
Remove ads

மாவட்ட நிர்வாகம்

புனே மாவட்டம் 14 வருவாய் வட்டங்களைக் கொண்டது.

  1. புனே நகர்புற தாலுகா - புனே
  2. ஹவேலி தாலுகா - பிம்பிரி-சிஞ்ச்வடு
  3. இந்தப்பூர் தாலுகா
  4. தௌந்து தாலுகா - தௌந்து
  5. பாராமதி தாலுகா - பாராமதி
  6. புரந்தர் தாலுகா
  7. போர் தாலுகா
  8. வேல்ஹே தாலுகா
  9. முல்சி தாலுகா
  10. மாவல் தாலுகா
  11. கேத் தாலுகா - ஆளந்தி
  12. அம்பேகாவ் தாலுகா
  13. ஜுன்னர் தாலுகா - ஜுன்னர்
  14. சிரூர் தாலுகா

மக்கள் தொகை பரம்பல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, புனே மொத்த மக்கள்தொகை 94,29,408 ஆகும். அதில் ஆண்கள் 4,924,105 மற்றும் பெண்கள் 4,505,303 ஆக உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) மக்கள் தொகை வளர்ச்சி 30.37% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 915 பெண்கள் வீதம் உள்ளனர். இம்மாவட்ட மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11,04,959 (11.75%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 71,71,723 (86.15%) ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 8,090,254 (85.80%), இசுலாமியர் 6,73,704 (7.14%), பௌத்தர்கள் 3,40,404 (3.61%), சமணர்கள் 1,27,786 (1.36 %), கிறித்தவர்கள் 1,34,192 (1.42%) மற்றும் பிறர் 0.67% ஆகவுள்ளனர்.[1] இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.

Remove ads

நீர்வளம்

இம்மாவட்டத்தில் பீமா ஆறு, பவனா ஆறு, முளா ஆறு, முடா ஆறு, புஷ்பவதி, கிருஷ்ணாவதி, ஆந்திரா, இந்திராணி, அம்பி, மோசே, சிவகங்கை, குஞ்சவ்னி, வேல்வந்தி, நீரா, கர்ஹா உள்ளிட்ட ஆறுகள் பாய்கின்றன. இங்குள்ள அணைகளில் கடக்வாஸ்லா அணை (முடா ஆறு) குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம்

புனே மாவட்டம் கல்வி & ஆராய்ச்சி, இராணுவம் தொடர்பான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வேளாண்மை வளர்ச்சி நிறைந்தது.

உற்பத்தித் துறை

1950-களில் பிம்பிரி, போசரி மற்றும் ஹதப்சர் பகுதிகளில் தொழிற்சாலைகள் துவக்கப்பட்டது. தட்டம்மை, காசநோய், மஞ்சள்காமாலை தடுப்பு மருந்துகள் மற்றும் நஞ்சு முறிப்பு மருந்துகள் தயாரிக்கும் இந்துஸ்தான் ஆண்டிபயோடிக்ஸ்[2] நிறுவனம் 1954 ஆண்டிலும் மற்றும் 1966-இல் பிம்பிரியில் சீரம் இன்ஸ்டிடியூட் மருந்து நிறுவனங்கள் புனே நகரத்தில் நிறுவப்பட்டது.

புனே மாவட்டத்தின் ஹவேலி தாலுகாவின் போசரி பகுதியில் 1966-இல் மகாராட்டிரா தொழில் வளர்ச்சி வாரியத்தின் சார்பில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டது.[3] 1961-இல் டாடா குழுமத்தின் மோட்டார் வாகனத் தொழிற்சாலை போசரி தொழிற்பேட்டையில் துவக்கியது. பின்னர் 1970களில் பஜாஜ், கைனடிக், பாரத் போர்ஜ், ஆல்பா லாவல், அட்லாஸ் கோப்கோ, சாண்ட்விக் மற்றும் தெர்மெக்ஸ், போர்ஸ்-மார்ஷல் போன்ற தொழிற்சாலைகள் துவக்கப்பட்டது.[4]

தொழிற்சாலைகளும், குடியிருப்புகளும் அதிக வளர்ச்சியடைந்ததால் புனேவின் புறநகர் பகுதிகளாக இருந்த பிம்பிரி, சிஞ்ச்வடு, போசரிகள் கொண்ட பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி 1982—இல் உருவானது.

1967-இல் புனே மாநகராட்சிக்கு வெளியில் இருந்த பிம்பிரி, சிஞ்ச்வடு, கட்கி கண்டேன்மென்ட், புனே கண்டோன்மென்ட், தேகு சாலை கண்டோன்மென்ட் மற்றும் காத்ரஜ், கோத்ரூத், ஹடப்சர், ஹிஞ்சவடி மற்றும் பாணேர் ஆகிய கிராமியப் பகுதிகள் புனே பெருமாநகராட்சி பகுதியில் இணைக்கப்பட்டது.[5] 2008-இல் ஜெனரல் மோட்டார்ஸ், போல்க்ஸ்வேகன், பியட் போன்ற கார் உற்பத்தி நிறுவனங்கள் தொழிற்சாலைகள் துவகியது. புனே மாவட்டத்தின் சிரூர் மற்றும் பாராமதி நகரங்களில் மகாராட்டிரா அரசு நிறுவிய தொழிற்பேட்டையில் பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டது. ஹிஞ்சவடி பகுதியில் பன்னாட்டு கணினி தொழில்நுட்ப நகரம் அமைக்கப்பட்டுள்ளது.

Thumb
ஹிஞ்சவடியில் இன்போசிஸ் நிறுவனக் கட்டிடம், புனே மாவட்டம்

1991-இல் இந்தியாவில் பொருளாதாரத் தளர்வுகள் ஏற்பட்டவுடன் புனே மற்றும் பிம்பிரி-சிஞ்ச்வடு நகரங்கள் பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்ததுடன், பன்னாட்டு தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிறுவனங்கள் மற்றும் கணினி நிறுவனங்கள் காலூன்றத் துவங்கின.

1997 மற்றும் 2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் புனேவின் புறநகர் பகுதிகளான அவுந்து, ஹிஞ்சவடியில் கணினி தொழில் நுட்ப பூங்காக்கள் நிறுவப்பட்டது.[6]

வேளாண்மை

புணே மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் நல்ல மழையும், விளைச்சலும் கொண்டது. மாவட்டத்தின் கிழக்குப் பகுதி மழைப் பொழிவு குறைவாக இருப்பினும், நீர்த் தேக்கங்களும், கால்வாய்களும் கொண்டது.[7] இம்மாவட்டத்தில் நெல், கரும்பு, சர்க்கரைச்சோளம், கம்பு, கோதுமை, பருப்பு, நிலக்கடலை, எண்ணெய் வித்துகள், சூரியகாந்தி பூ, மாம்பழம், திராட்சை, ஆரஞ்சு[8] , நவதானியம், வெங்காயம், காய்கறிகள் பயிரிடப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரரத்தில் உள்ள போர் தாலுகாவில் மட்டும் மாம்பழ வாசனையுடைய அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது.[9]

Thumb
நாராயணன்காவ் கிராமத்தின் ஒயின் தொழிற்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஒயின் பாரல்கள்

இம்மாவட்டத்தில் விளையும் கரும்புகளை பாராமதி மற்றும் தௌந்து போன்ற ஊர்களில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் அரவைக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. இம்மாவட்டத்தில் விளையும் பருத்தியை கூட்டுறவு நூற்பாலைகளுக்கு எடுத்துச் செல்கின்ற்னர்.[10]

Remove ads

நகரங்கள்

வழிபாட்டுத் தலங்கள்

சுற்றுலா

கோட்டைகள்

குடைவரைகள்

பிற

போக்குவரத்து

வான்வழிப் பயணத்துக்கு, புனே சர்வதேச விமான நிலையம் உள்ளது. தரைவழிப் பயணத்திற்கு, தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு ஊர்களுக்கு புனே தொடருந்து நிலையம் மூலம் தொடருந்துகள் இயங்குகின்றன. மேலும் புனே புறநகர் ரயில்வே இயங்குகிறது.

கல்வி & மருந்து ஆய்வு நிலையங்கள்

அரசியல்

புனே மாவட்டம் புணே மக்களவைத் தொகுதி, பாராமதி மக்களவைத் தொகுதி, ஷிரூர் மக்களவைத் தொகுதி மற்றும் மாவள் மக்களவைத் தொகுதி என 4 மக்களவைத் தொகுதிகளும், 22 சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது. மேலும் புனே மாநகராட்சி மற்றும் பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சிகளையும், தௌந்து, பாராமதி என நகராட்சிகளைக் கொண்டது.

தட்பவெப்பம்

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், புனே, மாதம் ...
Remove ads

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads