துஷாரா விஜயன்
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
துஷாரா விஜயன் (Dushara Vijayan), ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். போதை ஏறி புத்தி மாறி (2019) என்கிற திரைப்படத்தில் அறிமுகமான பிறகு, சார்பட்டா பரம்பரை (2021) அன்புள்ள கில்லி (2022) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
Remove ads
தொழில்
துஷாரா திண்டுக்கல்லில் பிறந்தவர். கோவை சென்று பொறியியல் படித்தார். ஒரு கட்டத்தில் பொறியியல் படிப்பை விட்டுவிட்டு, ஆடை வடிவமைப்பியல் படித்தார். 2019-ஆம் ஆண்டு புதுமுகங்கள் தயாரித்து வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2021 ஆம் ஆண்டு சார்பட்டா பரம்பரையின் நாயகியாகி நடிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2022 ஆம் ஆண்டில் நாயை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள அன்புள்ள கில்லி படத்தில் நடித்துள்ளார்.[2]
2021 ஆம் ஆண்டு வெளியான குத்துசண்டை விளையாட்டை மையமாகக் கொண்ட சார்பட்டா பரம்பரை திரைப்படம் துசாராவிற்கு திருப்பு முனையாக அமைந்தது. 1970 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சென்னைப் பெண்ணாக இவர் திரைப்படத்தில் தோன்றினார். இயக்குநர் பா. ரஞ்சித் சமூக வலைத்தளத்தில் இவரின் புகைப்படத்தை பார்த்து இருபது நிமிட நேர்காணலுக்கு பின்னர் தேர்வு செய்தார். துஷாராவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.
Remove ads
திரைப்படவியல்
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்பு |
2019 | போதை ஏறி புத்தி மாறி | சனனி | |
2021 | சார்பட்டா பரம்பரை | மாரியம்மா | |
2022 | அன்புள்ள கில்லி | அன்விதா | |
நட்சத்திரம் நகர்கிறது | ரெனே (தமிழ்) | [3] | |
2023 | கழுவேத்தி மூர்க்கன் | கவிதா | |
அநீதி | சுப்புலட்சுமி | ||
2024 | ராயன் | துர்கா | [4] |
வேட்டையன் (திரைப்படம்) | சரண்யா | ||
2025 | வீர தீர சூரன் | கலைவாணி |
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads