நட்சத்திரம் நகர்கிறது

பா.ரஞ்சித் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

நட்சத்திரம் நகர்கிறது
Remove ads

நட்சத்திரம் நகர்கிறது (Natchathiram Nagargiradhu) என்பது துசாரா விச்சயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் நடிப்பில் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் இசை நாடகத் திரைப்படமாகும். பா. ரஞ்சித்தின் படங்களுக்கு வழக்கமாக இசையமைக்கும் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனுக்கு பதில் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக டென்மாவை இசையமைத்துள்ளார்.[1][2][3][4]

விரைவான உண்மைகள் நட்சத்திரம் நகர்கிறது, இயக்கம் ...

இப்படத்தில் சில்வியாவாக நடித்த திருநங்கை நடிகை ஷெரின் செலின் மேத்யூ 17 மே 2022 அன்று கொச்சியில் தற்கொலை செய்து கொண்டார்.

நட்சத்திரம் நகர்கிறது 31 ஆகத்து 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மேலும் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[5]

Remove ads

நடிகர்கள்

 

Remove ads

வெளியீடு

இப்படம் 31 ஆகத்து 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

வீட்டு ஊடகம்

படத்தின் எண்ணியல் உரிமையை நெற்ஃபிளிக்சு நிறுவனம் கைப்பற்றியது. இப்படம் படம் 28 செப்டம்பர் 2022 முதல் நெற்ஃபிளிக்சில் வெளியிடப்பட்டது.[6]

வரவேற்பு

தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் எம் சுகந்த், இப்படத்துக்கு 3.5/5 நட்சத்திர மதிப்பு அளித்தார். "காதல், சாதி, ஆணவக் கொலைகள், இசை போன்ற பல வடிவங்களின் கலவையாக இப்படம் உள்ளது. இவை உண்மையில் படத்திற்கு மிகவும் அண்மைக்கால அதிர்வை அளிக்கின்றன.[7] இதுவரையிலான பா. ரஞ்சித்தின் படங்களில் தனக்குப் பிடித்த படம் இது என்று இயக்குநர் அனுராக் காஷ்யப் குறிப்பிட்டார்.[8]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads