துத்தநாக கார்பனேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
துத்தநாக கார்பனேட்டு (Zinc carbonate) என்பது ZnCO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் காணப்படும் இது தண்ணீரில் கரையாது. இசுமித்சோனைட்டு என்ற கனிமமாக இயற்கையில் துத்தநாகம் கார்பனேட்டு காணப்படுகிறது.
Remove ads
தயாரிப்பு
துத்தநாக சல்பேட்டின் குளிர் கரைசலை பொட்டாசியம் பைகார்பனேட்டுடன் சேர்த்து சூடுபடுத்தி துத்தநாக கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது. தொடர்ந்து சூடாக்கப்படும் போது இது கார துத்தநாக கார்பனேட்டாக மாற்றமடைகிறது.(Zn5(CO3)2(OH)6).[5]
கட்டமைப்பு
கால்சியம் கார்பனேட்டை ஒத்த கட்டமைப்பையே துத்தநாக கார்பனேட்டும் ஏற்கிறது. துத்தநாகம் எண்முகம் என்பதால் ஒவ்வொரு கார்பனேட்டும் ஆறு துத்தநாக மையங்களுடன் பிணைக்கப்பட்டிருக்கும். அதாவது ஆக்சிசன் அணுக்கள் மூன்று ஒருங்கிணைப்பில் காணப்படும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads