துர்கா வாகினி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

துர்கா வாகினி (Durga Vahini), விஸ்வ இந்து பரிசத்தின் மகளிர் அணியாகும். 1991இல் துவக்கப்பட்ட துர்கா வாகினியின் நிறுவனத் தலைவர் சாத்வி ரிதம்பரா ஆவார். இவ்வமைப்பு பெண்களை இந்து சமயக் கூட்டங்களிலும், கலாசார நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ள ஊக்கமளிக்கிறது. பெண்கள் தங்களாகவே முன்வந்து தங்களின் உடல் மற்றும் அறிவு மேம்பாட்டை வளர்த்து, இந்து சமய கலாசாரத்தையும் பண்பாட்டு மரபுகளையும் பேணிக்காக்க இவ்வமைப்பின் மூத்த தலைவர் கல்பனா வியாஸ் வலியுறுத்துகிறார்.[1] இவ்வமைப்பின் நோக்கம் இந்து மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டவும், சமுக சேவை மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்தலே.[2] 2002 ஆண்டு முடிய இவ்வமைப்பில் உள்ள 8000 உறுப்பினர்களில் 1000 பேர் அகமதாபாத் நகரத்தில் உள்ளனர்.[1]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads