துளுவம்
இந்தியாவில் பேசப்படும் திராவிட மொழிகளில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
துளு அல்லது துளுவம் ஒரு தமிழ் குடும்ப கிளை மொழியாகும். இதனை தற்போது இரண்டு மில்லியனுக்கும் சற்று குறைவான மக்கள் பேசுகின்றனர். இது பெரும்பாலும் கர்நாடக மாநிலத்தின் தென் கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களிலும் கேரளம் மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்திலும் பேசப்படுகிறது.


இம்மொழிக்கு எழுத்துரு (வரிவடிவம்) இல்லாதிருந்தது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் எழுத்துரு (வரிவடிவம்) அமைக்கப்பட்டது. இவ் எழுத்துரு (வரிவடிவம்) மலையாளத்தை ஒத்திருந்தாலும் தற்காலத்தில் கன்னட மொழியின் வரிவடிவமே பயன்படுத்தப்படுகிறது.

Remove ads
பேசப்படும் பகுதிகள்
முன்னர் துளு மொழி கேரளாவின் காசரகோடு மாவட்டத்தின் சந்திரகிரி ஆற்றின் மேற்கிலிருந்து, கர்நாடக மாநிலத்தின் வட கன்னட மாவட்டத்தின் கோகர்ணா வரை பேசப்படுப்பட்டது. தற்போது இம்மொழி பேசுபவர்கள் கேரளாவின் காசரகோடு மாவட்டத்தின் வட பகுதியில் சில இடங்களிலும் மற்றும் கர்நாடக மாநிலத்தின் தென் கன்னட மற்றும் உடுப்பி மாவட்டத்தில் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. மேலும் இப்பகுதியில் மட்டும் துளு கலாச்சாரம் தற்போது நிலவுகிறது, இப்பகுதி துளுநாடு என்றும் அழைக்கின்றனர்.
Remove ads
சில துளு சொற்கள்
வழக்கமாக உபயோகிக்கப்படும் சில துளு சொற்கள்:
- தமிழ் - துளு (roman, தமிழ் எழுத்தில் துளு சொல்) [தமிழ் இணைச் சொல்]
- நான், me = yaañ, யான்
- நீ , you = ee, ஈ
- நீர் you(respectfull) = eer, ஈர்
- அவர், they = akulu, அகுலு (அகுளு?)
- பெயர், name = pudar, புடர்
- ஊர், town = ooru, ஊரு
- அல்ல, no = attü, அத்து
- ஆமாம், yes = andü, அந்து
- ஏன், why = dayeg, தயெக்
- எங்கே, where = volu, வோலு
- என்ன, what = daada, தாத
- நின் பெயர் என்ன, what's your name = ninna pudar yenchina ?நின்ன புடர் யென்சின?
- நீர் எங்கே உள்ளீர், where are you ? = volu ullar eer ?வோலு உள்ளார் ஈர் (ஈர் வோலு உள்ளார்??)
- உணவு உண்டாயிற்றா, Had your lunch? = vonus aanda? வூணு ஆந்தா ??
- வேண்டாம், dont want = bodchi, போட்சி
- ஆண்பிள்ளை, Boy = Aanü, ஆணு
- பெண் பிள்ளை, girl = Ponnü, பொண்ணு
- ஆண், Man = Andjovü, ஆண்ட்யொவு??
- பெண், Woman = Ponndjovü, பொண்ட்யொவு??
- ஆறு River = Tudé/Sudé, டுடே, சுடே
- ஓடை Stream = Todü, டொடே [தமிழ்- ஓடை, தமிழில் தொடை = தொடர்ந்து இருப்பது]
- குளம், ஏரி Lake = Kulá குள
- பாலம், Bridge = Sanká சங்கா
- நாய், Dog = Nayee நாயி
- பூனை, பூஞை Cat = Pucchè புச்செ
- ஆ, பசு, Cow = Pethá பெத்த (தமிழ்- பெற்றம்)
- கை, hand = Kayi, கயி
- கால், Leg = Kaar, கார்
- குழல், முடி, மயிர் Hair = Kujal, குஜல்
Remove ads
மேலும் காண்க
குறிப்புகள்
- கர்நாடகாவின் தெற்கு கன்னட மாவட்டம் மற்றும் உடுப்பி மாவட்ட தெற்கு பகுதி மற்றும் கேரளாவின் காசர்கோடு மாவட்டம் ஒரு பகுதி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads