தூலியம்(III) நைட்ரேட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தூலியம்(III) நைட்ரேட்டு (Thulium(III) nitrate) என்பது Tm(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தூலியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.[1][2][3] கரும்-பச்சை நிறப் படிகங்களாக உருவாகும் இது, தண்ணீரில் எளிதில் கரைகிறது. படிக நீரேற்றுகளையும் உருவாக்குகிறது.
Remove ads
தயாரிப்பு
தூலியத்துடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் தூலியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது:[4]
- Tm + 6HNO3 → Tm(NO3)3 + 3NO2 + 3H2O
தூலியம் ஐதராக்சைடுடன் நைட்ரிக் அமிலம் வினைபுரிவதாலும் தூலியம்(III) நைட்ரேட்டு கிடைக்கிறது.
- Tm(OH)3 + 3HNO3 → Tm(NO3)3 + 3H2O
இயற்பியல் பண்புகள்
தூலியம்(III) நைட்ரேட்டு கரும்-பச்சை நிறப் படிகங்களாக உருவாகும். நீருறிஞ்சும்.
Tm(NO3)3·5H2O. என்ற வாய்ப்பாடு கொண்ட படிக நீரேற்றுகளை இது உருவாக்குக்கிறது.[5][6]
தண்ணீர் மற்றும் எத்தனாலில் கரையும்.[7]
வேதிப் பண்புகள்
மிதமாகச் சூடாக்கும்போது இச்சேர்மமும், இதன் படிக நீரேற்றும் சிதைவடைகின்றன. நீரேற்றப்பட்ட துலியம் நைட்ரேட்டு வெப்பத்தால் சிதைந்து TmONO3 ஆக மாறுகிறது. தொடர்ந்து சூடாக்கும்போது தூலியம் ஆக்சைடாக சிதைகிறது.
பயன்
தூலியம்(III) நைட்ரேட்டு ஒரு வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒளியியல் கண்ணாடிகள், மட்பாண்டங்கள், வினையூக்கிகள், மின் கூறுகள் மற்றும் புகைப்பட- ஒளியியல் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.[8]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads