தென்னிந்திய திருச்சபை-திருநெல்வேலி திருமண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென்னிந்திய திருச்சபைகளில் உள்ள 24 திருமண்டலங்களில் திருநெல்வேலி திருமண்டலம் பழமையான ஒன்றாகும். இத்திருமண்டலம் திருநெல்வேலியை மையமாக கொண்டு செயல்படுகிறது. இது தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் அமையப்பெற்றுள்ளது. இத்திருமண்டலத்தின் நிர்வாகத்தின் கீழ் 687 ஆலயங்கள், 101 போதகர்களும், மற்றும் 1,86,000 உறுப்பினர்களை கொண்டு இயங்கி வருகிறது. பாளையங்கோட்டையில் உள்ள தூய திரித்துவ பேராலயம் இத்திருமண்டலத்தின் பேராலயமாக செயல்படுகின்றது.

இதன் ஆலயங்கள் பெரும்பாலும் திருச்சபை மிஷினரி சங்கத்தால் (CMS) மற்றும் சுவிஷேசத்தை பிரசித்தப்படுத்தும் சங்கத்தால் (SPG) மிஷனெரிகளால் நிறுவப்பட்டதாகும். 1896 ஆம் ஆண்டு இந்த ஆலயங்கள் இணைந்து, திருநெல்வேலி தனி திருமண்டலமாக பிரிக்கப்பட்டது, 1947ஆம் ஆண்டு திருமண்டல அறக்கட்டளையின் (TDTA) மூலம் திருமுழுக்கு மற்றும் பிரஸ்பெடரியன் சபையார் ஒன்று இணைக்கப்பட்டனர். இதன் பேராயராக பேரருள்திரு ARGST பர்னபாஸ் 2021 முதல் செயல்பட்டு வருகிறார்.[2]
Remove ads
வரலாறு
அக்டோபர் 1896 இல், திருநெல்வேலி (திருநெல்வேலிக்கான ஆங்கிலப் பெயர்[3]) சென்னை மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்டது. இம்மறைமாவட்டத்தின் முதல் ஆயராக அருட்தந்தை சாமுவேல் மார்லி நியமிக்கப்பட்டார்.[4][5]
முதல் இந்திய பேராயரான வி.எஸ்.அசரியா திருநெல்வேலி திருமண்டலைத் சேர்ந்தவராவார்.
திருமண்டல நிர்வாகப் பிரச்சனைகள்
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திருநெல்வேலி திருமண்டலத்தின் வருடாந்த உறுப்பினர் தொகை ரூபாய் 100லிருந்து ரூபாய் 300ஆக அதிகரிக்கப்பட்டது. ஆயர்களின் பணி ஓய்வு பெறும் ஆண்டு 65யிலிருந்து 67ஆக அதிகரிகப்பட்டது. ஆயர்களை நீக்குவதற்கான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த மாற்றங்களை நிறைவேற்றுவதற்காக உறுப்பினர்களிடம் ஆதரவு குரல் வாக்கெடுப்பு கோரப்பட்டது. இந்த வாக்கெடுப்புக்கு பேராயர் ஜே.ஜே.கிறிஸ்துதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவையில் குழப்பம் நீடித்த்து. பணி ஓய்வு வயதை அதிகரிக்க எடுத்த முடிவால் ஜே.ஜே. கிறிஸ்துதாஸின் பணி தொடர்ந்தது.
Remove ads
திருமண்டல பேராயர்கள்
- சாமுவேல் மோர்லே (1896-1903)
- ஆர்தர் எ வில்லியம்ஸ் (1905-1914)
- ஹாரி எம். வாலர் (1915-1923)
- நார்மன் எச் டப்ஸ் (1923-1928)
- ஃப்ரெட்ரிக் ஜே வெஸ்டர்ன் (1929-1938)
- ஸ்டீபன் சி நெய்ல் (1939-1944)
- ஜார்ஜ் டி செல்வன் (1945-1952)
- ஆகஸ்டின் ஜி ஜெபராஜ் (1953-1970)
- தாமஸ் எஸ் கரேட் (1971-1974)
- எஸ். டேனியல் ஆபிரகாம் (1975-1984)
- ஜேசன் எஸ் தர்மராஜ் (1985-1999)
- எஸ் ஜெயப்பால் டேவிட் (1999-2009)
- ஜே ஜே கிறிஸ்துதாஸ் (2009 -2020)
- A R G S T பர்னபாஸ் (2021 - இன்று வரை)
திருமண்டலத்தின் கல்வி நிறுவனங்கள்
- தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் -323
- உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் -13
- கலைக் கல்லூரிகள் -6
- ஆசிரியர் பயிற்சி நிறுவனம் -3
மேற்கோள்
வெளிபுற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
