தென்னிந்திய நடிகர் சங்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம்(ஆங்கிலம்: South Indian Film Artistes' Association, SIFAA) அல்லது பரவலாக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தமிழ்நாட்டில் தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றும் நடிகர்களையும் நடிகைகளையும் உறுப்பினராகக் கொண்ட சங்க அமைப்பாகும். இது 1952இல் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு திரைப்படத்துறை தொடர்புடைய பிரச்சினைகளுக்காக பல நிகழ்வுகளை நடத்தி உள்ளனர். அண்மையில் சமூகப் பிரச்சினைகளுக்காகவும் அறப்போராட்டங்கள் நடத்தி உள்ளனர். இச்சங்கத்தின் தற்போதைய தலைவராக நடிகர் நாசர் உள்ளார்.

விரைவான உண்மைகள் Founded, Country ...
Remove ads

நிகழ்வுகள்

2001

நடிகர்களின் நாள்
அக்டோபர் 1, 2001 அன்று தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஜயகாந்த், நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளான அக்டோபர் 1 நடிகர்களின் நாளாக தமிழ்நாட்டில் அனுசரிக்கப்படும் என அறிவித்தார்.

2008

ஒகெனேக்கல் குடிநீர் பிரச்சினை உண்ணாநிலைப் போராட்டம்
மே 2008இல் தலைவர் ஆர். சரத்குமார் ஒருநாள் உண்ணாநிலைப் போராட்டத்தை ஒருங்கிணைத்தார்; கருநாடக அரசு ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தில் சர்ச்சைக்குரிய திட்டம் இயற்றியதை எதிர்த்தும் கருநாடகத்தில் தமிழர் நிலை குறித்தும் இந்த அறப்போராட்டம் நடத்தப்பட்டது.
இலங்கை-ஈழத்தமிழர் உள்நாட்டுப்போர் உண்ணாநிலைப் போராட்டம்
செப்டம்பர் 2008இல் இலங்கையில் ஏராளமான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்தும் நடைபெற்று வந்த ஈழப்போரை எதிர்த்தும் ஒருநாள் உண்ணாநிலை போராட்டம் நடத்தப்பட்டது.

2009

தினமலர் கட்டுரைக்கு கண்டனம்
பல தமிழ் நடிகைகள் சட்டவிரோத பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனை காவல்துறை அதிகாரிகளிடம் நடிகை புவனேசுவரி வெளிப்படுத்தியதாகவும் தினமலரில் வெளியான செய்திக்கு கண்டனம் தெரிவித்து அக்டோபர் 7, 2009 அன்று சரத்குமார் பேரணி நடத்தினார். கட்டுரையில் ஒளிப்படங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்த நமிதா கபூர் (நடிகை), சீதா, நளினி, அஞ்சு, சகீலா, மஞ்சுளா விஜயகுமார் மற்றும் சிறீபிரியா பற்றிய செய்தி பொய்யானது என சென்னை காவல் ஆணையரிடம் செய்தித்தாளின் ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட வேண்டும் என மனு கொடுத்தனர். இந்த மனு மற்றும் போராட்டத்தை அடுத்து லெனின் கைது செய்யப்பட்டார்.[1]

2010

திருட்டு திரைப்பட வட்டு விழிப்புணர்வு
தலைவர் சரத்குமாரும் அவரின் மனைவியும் ஜக்குபாய் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளருமான ராதிகாவும் சனவரி 4 அன்று நடத்திய பத்திரிகையாளர் கூட்டத்தில் திரைப்படங்களை திருடி இணையத்தில் வெளியிடுவதற்கும் திருட்டு வட்டுக்களை விற்பதற்கும் கண்டனம் எழுப்பினர். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்திருந்த ஜக்குபாய் முழுமையாக இணையத்தில் தரவேற்றப்பட்டிருந்தது.[2]
Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads