தென் பசிபிக் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென் பசிபிக் பல்கலைக்கழகம் (University of the South Pacific, USP) என்பது ஓசியானியாவின் பல நாடுகளில் வளாகங்களைக் கொண்டுள்ள ஒரு ஆய்வு சார் பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இது பசிபிக் கலாசாரம், மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கான பன்னாட்டு ஆய்வு மையம் ஆகும். இப்பல்கலைக்கழகத்தின் கல்வித் திட்டம் உலக அளவில் ஆங்கீகரிக்கப்பட்டதாகும். இங்கு பசிபிக் நாடுகளில் இருந்து மட்டுமல்லாமல் பல உலக நாடுகளில் இருந்தும் மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். 1968 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் பொதுநலவாயத்தின் கல்வித்திட்டத்துக்கமைய தனது கல்வியை வழங்குகின்றது. ஆத்திரேலியா, நியூசிலாந்துக்கு வெளியே உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு ஓசியானியாப் பிராந்தியப் பல்கலைக்கழகம் இதுவாதும். இது ஓசியானாவின் குக் தீவுகள், பிஜி, கிரிபட்டி, மார்சல் தீவுகள், நவூரு, நியுவே, சமோவா, சொலமன் தீவுகள், டோக்கெலாவ், தொங்கா, துவாலு, வனுவாட்டு ஆகிய 12 நாட்டு அரசுகளுக்குச் சொந்தமானது. இதன் தலைமை வளாகம் பிஜி நாட்டில் அமைந்துள்ளது.
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads