வனுவாட்டு

From Wikipedia, the free encyclopedia

வனுவாட்டு
Remove ads

வனுவாட்டு (Vanuatu, English: /ˌvɑːnˈɑːt/ (கேட்க), பிசுலாமா: Vanuatu), அல்லது வனுவாட்டு குடியரசு (Republic of Vanuatu) என்பது பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். எரிமலைகளைக் கொண்டுள்ள இத்தீவுக்கூட்டம், ஆத்திரேலியாவுக்கு சுமார் 1,750 கி.மீ. (1090 மைல்) கிழக்கேயும், நியூ கலிடோனியாவுக்கு 500கி.மீ. (310மைல்) வட-கிழக்கேயும், பீஜிக்கு மேற்கேயும், சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் வனுவாட்டு குடியரசுRepublic of Vanuatu, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...

வனுவாட்டுவில் முதலில் மெலனீசிய மக்கள் வாழ்ந்து வந்தனர். 1606 ஆம் ஆண்டில் போர்த்துக்கீச மாலுமி பெர்னான்டசு டி குயிரோசு என்பவரின் தலைமையில் எசுப்பானியக் கப்பல் இங்கு முதன் முதலில் ஐரோப்பாவில் இருந்து எஸ்பிரித்து சான்டோ என்ற மிகப் பெரிய தீவில் தரையிறங்கியது. இத்தீவுக்கூட்டத்தை குடியேற்றக்கால எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் ஒரு பகுதியாக அறிவித்து, இதற்கு "ஆத்திரேலியா டெல் எஸ்பிரித்து சான்டோ" (Austrialia del Espiritu Santo) எனப் பெயரிட்டார்.

1880களில், பிரான்சும், ஐக்கிய இராச்சியமும் இத்தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியை தமது பகுதிகளாக அறிவித்தன. 1906 ஆம் ஆண்டில் இத்தீவுக்கூட்டத்தை பிரித்தானிய-பிரெஞ்சு கூட்டுரிமை மூலம் "நியூ எபிரைட்சு" (New Hebrides) என்ற பெயரில் நிருவகிக்க உடன்பட்டன. 1970களில் நாட்டில் விடுதலைக்கான இயக்கம் வலுப்பெற்று 1980 ஆம் ஆண்டில் இத்தீவுக்கூட்டம் வனுவாட்டு குடியரசு என்ற பெயரில் விடுதலை அடைந்தது.

Remove ads

சொற்பிறப்பு

பல ஆத்திரோனேசிய மொழிகளில் நிலம் அல்லது வீட்டைக் குறிக்கும் "வனுவா"[8] என்னும் சொல்லில் இருந்தும், நில் என்பதைக் குறிக்கும் டு என்ற சொல்லில் இருந்தும்[9][9] வனுவாட்டு என்ற பெயர் பிறந்தது.[10]

புவியியல்

Thumb
வனுவாட்டுவின் நிலவரை

வனுவாட்டு எரிமலை விளைபொருட்களாகத் தோன்றிய சுமார் 82 சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு Y-வடிவத் தீவுக் கூட்டம் ஆகும். இவற்றில் 65 மக்களற்ற தீவுகள் ஆகும். வட, த்னெ முனைத் தீவுகளுக்கிடையேயான தூரம் கிட்டத்தட்ட 1,300 கி.மீ. (810 மைல்) ஆகும்.[11] இரண்டு தீவுகள் (மெத்தியூ மற்றும் ஹன்டர் தீவுகள்) பிரான்சினால் நியூ கலிடோனியாவின் கூட்டிணைவில் நிருவகிக்கப்படுகிறது.

போர்ட் விலா வனுவாட்டுவின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இது எஃபாட்டே தீவில் உள்ளது. அதற்கடுத்த பெரிய நகரம் லூகன்வில் எஸ்பிரித்து சான்டோ தீவில் உள்ளது.[12] வனுவாட்டுவின் அதியுயர் புள்ளி எஸ்பிரித்து சான்டோவில் உள்ள தப்வெமசானா மலை ஆகும். இதன் உயரம் 1,879 மீ (6,165 அடி) ஆகும்.

வனுவாட்டுவின் மொத்தப் பரப்பளவு கிட்டத்தட்ட 12,274 சதுரகி.மீ. (4,739 சது.மைல்),[13] இவற்றில் நிலப்பரப்பு கிட்டத்தட்ட 4,700 சதுரகி.மீ. (1,800 சதுரமைல்) ஆகும். பெரும்பாலான தீவுகள் செங்குத்தானவையாகவும், திரமற்ற மணலையும் கொண்டுள்ளன, நன்னீர் மிகக்குறைந்தளவே உள்ளன.[11] வனுவாட்டுவின் 9% நிலப்பகுதியே வேளாண்மைக்கு உகந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது.[14]

வனுவாட்டுவில் பெருமளவு செயல்நிலை எரிமலைகள் காணப்படுகின்றன. பல கடலடி எரிமலைகளும் உள்ளன. 2008 நவம்பரில் 6.4 அளவு கடலடி எரிமலை வெடிப்பு இடம்பெற்றது. ஆனாலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. 1945 இலும் எரிமலை வெடிப்பு இடம்பெற்றது.[15]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads