தெய்வச்சிலையார் உரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தொல்காப்பியம் சொல்லதிகாரப் பகுதிக்குக் கிடைத்துள்ள உரை நூல்களில் தெய்வச்சிலையார் உரையும் ஒன்று. பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தெய்வச்சிலையார் இந்த உரையை எழுதினார்.[1][2][3]
- தெய்வச்சிலையார் உரையில் பிற உரையாசிரியர் பற்றிய குறிப்பு இல்லை. அதைப் போலவே பிற உரைகளிலும் தெய்வச்சிலையார் பற்றிய குறிப்பு இல்லை.
- இந்த உரையை விருத்தியுரை என்பர். காரணம் ஒவ்வொரு இயலின் இறுதியிலும் எழுத்தை எண்ணி இத்தனை எழுத்து[4] என்று சொல்கிறார்.
- தனக்குப் புலனாகாத இடங்களில் "விளங்கவில்லை" என இவ்வுரை குறிப்பிடுகிறது.
- சில உரைகள் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் உரைகளை மறுப்பது போல் காணப்படுகின்றன.
- எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, மணிமேகலை, சூளாமணி ஆகிய நூல்களிலிருந்து மட்டுமே இந்த உரை மேற்கோள்களைத் தருகிறது.
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads