தேக்கு அருங்காட்சியகம்
கேரளத்தில் உள்ள அருங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேக்கு அருங்காட்சியகம் (Teak Museum) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தில், நீலம்பூரில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்தியாவில் இயற்கையாகவே தேக்குக் காடுகள் காணப்படும் பகுதிகள் கொண்டது கேரளம் ஆகும். [1]


இரண்டு மாடி கட்டடத்தில் உள்ள இந்த அருங்காட்சியகம் உலகின் முதல் தேக்கு அருங்காட்சியகமாகும், இது கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் தேக்கு பயன்பாட்டின் அம்சங்கள் மற்றும் தேக்கு குறித்த அ முதல் ஃ வரையிலான அனைத்து தகவல்களும் உள்ளன. இந்த அருங்காட்சியகம் வரலாற்று ரீதியாகவும், கலை ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் விரிவான தகவல்களை வழங்குகிறது. [2]
கேரள வன ஆராய்ச்சி நிறுவன மையத்தின் வளாகத்தில் 1995 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது, ஏனெனில் இந்த பகுதி தேக்கு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் முதல் தேக்கு தோட்டம் 1840 களில் நிலம்பூரில் ஆங்கிலேயர்களால் உருவாக்கபட்டது. [3]
Remove ads
அமைவிடம்


. இது நிலாம்பூருக்கு அருகிலுள்ள மஞ்சேரி- உதகை சாலை பகுதியில் அமைந்துள்ளது மற்றும் சுற்றுண்சுவரால் பாதுகாக்கப்படுகிறது.
பார்வை நேரம்
அருங்காட்சியகத்தின் விடுமுறை நாளான திங்கள் தவிர அனைத்து நாட்களிலும் பார்வையாளர்கள் காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.
அருகிலுள்ள தொடருந்து நிலையம் தேக்கு அருங்காட்சியகத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் நிலம்பூரில் உள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் கரிப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும் இது மலப்புரத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது. [4]
படக்காட்சியகம்
- தேக்கு அருங்காட்சியகம்
- இயற்கைப் பூங்கா
- அருங்காட்சியகத்தின் பின்புறம்
- நான்காவது தோட்டம்
- நான்காவது தொட்டத்தின் உள்ளே
குறிப்புகள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
