தேசிய ஊடக மையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய ஊடக மையம் (National Media Centre) என்பது இந்திய அரசாங்கத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஊடக மையமாகும். தேசிய பத்திரிகை மையம் என்றும் இது அழைக்கப்படுகிறது.
மத்திய தில்லியின் ரைசினா சாலையில் குடியரசுத் தலைவர் மாளிகை, சன்சாத் பவன் (நாடாளுமன்ற மாளிகை) மற்றும் முக்கியமான அமைச்சகங்களுக்கு அருகில் இது அமைந்துள்ளது. இதற்கான அடித்தள விழா 2001 ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2013 ஆண்டு தேசிய ஊடக மையம் திறக்கப்பட்டது. இங்கு பத்திரிகை தகவல் பணியகம் மற்றும் அமைச்சகத்தின் விளம்பர அலுவலகங்கள் உள்ளன.[1] இம்மையம் வாசிங்டன், டோக்கியோ மற்றும் பிற தலைநகரங்களில் உள்ள ஊடக மையங்களை மாதிரியாக கொண்டிருக்கிறது.
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் அடிக்கல் நாட்டி பூமி பூசையை 2001 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 5 அன்று தேசிய பத்திரிகை மையத்திற்கு பெயரிட்டு கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார். தேசிய கட்டிடக் கட்டுமானக் கழகத்தால் மூன்று ஆண்டு காலப்பகுதியில் 60 கோடி டாலர் (8.4 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவில் மையத்திற்கான கட்டிடம் கட்டப்பட்டது. 2013 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 24 அன்று பிரதமர் மன்மோகன் சிங் ஊடக மையத்தை திறந்து வைத்தார்.[2][3][4]
தேசிய ஊடக மையம் 1.95 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. கண்ணாடி முகப்பில் கட்டிடம் நான்கு தளங்களைக் கொண்டுள்ளது, 283 பேர் அமரக்கூடிய பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கான ஒரு மண்டபம் இங்குள்ளது. இதைத் தவிர 60 நபர்கள் அமரும் திறன் கொண்ட ஒரு மாநாட்டு அறை, 24 பணிநிலையங்கள். போன்ற வசதிகளும் உள்ளன. அனைத்து நவீன தகவல் தொடர்பு வசதிகளும் இங்கு உண்டு. ஒரு நூலகம், ஓய்வறை மற்றும் சிற்றுண்டிச்சாலை ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பத்திரிகையாளர் சந்திப்பு மண்டபம் மற்றும் ஊடக ஓய்வறைகளில் இணைப்புக்கான ஏற்பாடுகளூம் செய்யப்பட்டுள்ளன.[5]
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads