தேசிய கயால் ஆராய்ச்சி மையம்
இந்தியாவின் நாகாலாந்தில் உள்ள தன்னாட்சி ஆராய்ச்சி மையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய கயால் ஆராய்ச்சி மையம் (National Research Centre on Mithun) என்பது இந்தியாவின் நாகாலாந்தில் உள்ள தன்னாட்சி ஆராய்ச்சி மையமாகும். இது அறிவியல் மற்றும் நிலையான கயால் (ஒரு வகை பெரிய மாடு) வளர்ப்பு முறையை உருவாக்குவதற்கும் கயால் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் நாகாலாந்து மாநிலம் திமாப்பூர் மாவட்டத்தில் உள்ள மெட்சிபெமாவில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பணி ஆணை 1997 மற்றும் 2006-ல் மறுவரையறை செய்யப்பட்டது.[1][2][3]

இந்த மையம், நாட்டில் கிடைக்கும் கயால் மூலவுயிர்முதலுரு (ஜெர்ம்பிளாசம்) அடையாளம் காணுதல், மதிப்பீடு செய்தல் மற்றும் வகைப்படுத்துதல் மற்றும் இறைச்சி மற்றும் பாலுக்கான காயலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை முக்கிய பணியாகும். கயால் பற்றிய மூலவுயிர்முதலுரு மற்றும் தகவல் மையத்தின் களஞ்சியமாகச் செயல்படுகிறது.[4][5][6]
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads