கயால்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிதுன் என்றழைக்கப்படும் கயால் என்பது மாட்டு இனத்தை சேர்ந்த பழக்கப்படுத்தப்பட்ட பெரிய விலங்கு ஆகும். இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் வடக்கு மியன்மரிலும் பங்களாதேஷிலும் சீனாவின் யுனான் மாகாணத்திலும் பரவியுள்ளது.[1]
இதன் தோற்றம் குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன
- இது கடமா என்னும் காட்டு மாட்டினை பழக்கப்படுத்தி வந்திருக்கலாம்.[1]
- கடமா, நாட்டு மாடு இவற்றின் கலப்பினமாக இருக்கலாம்.[2] ஆனால் இன்றுவரை இது நிரூபிக்கப்படவில்லை.[3] கடமாவிலிருந்து காயல் பல குறிப்பிடத்தக்க அம்சங்களில் வேறுபடுகிறது.[4]
கயால்கள் மலைக்காடுகளில் பெரும்பாலும் வாழ்கின்றன. மலைப்பகுதிகளில் வாழும் தெற்காசிய இனக்குழுக்களில் திரிபுரா, மிசோரம், அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து பல குழுக்கள் இவற்றை வீட்டுவிலங்காக வளர்த்துவருகின்றனர். மேலும் சிட்டகாங்க் மலைப்பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன.[4] வடக்கு மியன்மரில் கச்சின் மாநிலத்திலும் யுனான் மாநிலத்தில் துரங் மற்றும் சல்வீன் ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காணப்படுகிறது.[1] அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் மாநில விலங்கு இதுவே ஆகும். மேலும் அருணாச்சல பிரதேச மக்களின் வாழ்க்கையில் இந்த கயால் இரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads