தேசிய நபராக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நபராக்கம் (national personification) என்ற கருதுகோள் ஓர் நாட்டிற்கோ அதன் மக்களுக்கோ மாந்தவுருவகம் தருவதாகும்; இது அந்நாட்டைக் குறித்த கேலிச் சித்திரங்களிலும் பரப்புரைகளிலும் பயன்படுத்தப்படும்.

துவக்கதில் மேற்கத்திய உலகில், அறிவு மற்றும் போர்க் கடவுளான மினர்வா/அத்தீனாவின் தேசிய உருவாக்கத்தையும் உரோமை மாநிலத்தின் இலத்தீன் பெயரையும் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாக பிரித்தானியா, செருமானியா, ஐபெர்னியா, ஹெல்வெதியா மற்றும் போலோனியா ஆகியோரைக் கூறலாம். சாதாரண மனிதன் அல்லது குடிமகனை கொண்ட உருவகங்களுக்கு—நாட்டை உருவகப்படுத்தாது— இடாய்ச்சு மிகெல் மற்றும் ஜான் புல்லைக் காட்டாகக் கொள்ளலாம்.[1]
தேசிய நபராக்கமும் தேசியச் சின்னமும் ஒன்றல்ல; சில நாடுகளில் மாந்தவுருவகமல்லாது தேசிய விலங்குகள் நாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
Remove ads
காட்சிக்கூடம்
- ஜெர்மனியை குறிக்கும் செருமானியா ஓவியம்.
- உலகப்போர்களின் போது ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் பணியெடுப்பு பதாகையில் சாம் அங்கிள்
- பாரத மாதாவின் தங்க முலாம் பூசப்பட்ட சிலை.
- தமிழன்னையின் சிலை
மேற்சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads