தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம் (இந்தியா)
இந்தியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் திட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம் (National Highways Development Project) என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். இந்தத் திட்டம் 1998 ல் அடல் பிகாரி வாச்பாய் அரசால் கொண்டுவரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் என்பது மொத்த சாலை தூரங்களில் 2 % மட்டுமே ஆனால் இந்தியாவின் மொத்த போக்குவரத்தில் 40 % இந்த சாலைகள் மூலமாகவே நடைபெறுகிறது.[1][2][3]
இந்த திட்டத்தின் நோக்கம் இந்திய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவது, தரமுயர்த்துவது, அகலமாக்குவது போன்றவையாகும்.இத்திட்டம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை (NHAI) கொண்டு சாலை, நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
Remove ads
கட்டங்கள்
- கட்டம் I: திசம்பர் 2000இல் ₹300 பில்லியன் செலவில் தங்க நாற்கரச் சாலைத் திட்டம், கிழக்கு-மேற்கு மற்றும் தெற்கு- வடக்கு பெருந்தடவழிகளின் பகுதி மற்றும் முக்கிய துறைமுகங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஏற்பளிப்பு.
- கட்டம் II: திசம்பர் 2003இல் ₹343 பில்லியன் திட்டச்செலவில் கிழக்கு-மேற்கு மற்றும் தெற்கு-வடக்கு பெருந்தடவழிகளின் மீதப் பகுதிகளுக்கும் மேலும் 486 கி.மீ. (302 மை) நெடுஞ்சாலைகளுக்கும் ஏற்பளிப்பு.
- கட்டம் IIIA: மார்ச்சு 2005இல் ₹222 பில்லியன் திட்டச்செலவில் 4,035 கி.மீ. (2 மை) தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு தட வழிகளாக மேம்படுத்த ஏற்பளிப்பு.
- கட்டம் IIIB: ஏப்ரல் 2006இல், ₹543 பில்லியன் திட்டச்செலவில் 8,074 கி.மீ. (5 மை) தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு தட வழிகளாக மேம்படுத்த ஏற்பளிப்பு.
- கட்டம் V: அக்டோபர் 2006இல், 5,700 கி.மீ. (3 மை) நீளம் தங்க நாற்கரச் சாலைகள் உட்பட, 6,500 கி.மீ. (4 மை), தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு தட வழிகளாக மேம்படுத்த ஏற்பளிப்பு. இது முற்றிலும் DBFO முறைமையில்.
- கட்டம் VI: நவம்பர் 2006இல் ₹167 பில்லியன் திட்டச்செலவில் 1,000 கி.மீ. (620 மை) தொலைவு விரைவுச்சாலைகளை உருவாக்கிட ஏற்பளிப்பு
- கட்டம் VII: திசம்பர் 2007இல், ₹167 பில்லியன் திட்டச்செலவில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தேர்ந்தெடுத்த தேசியச்சாலைகளில் வட்டச்சாலைகள், புறவழிச்சாலைக்ள, மேற்பாலங்கள் கட்டமைக்க ஏற்பளிப்பு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads