தேசிய நெடுஞ்சாலை 134 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 134, (National Highway 134 (India)) பொதுவாக தே. நெ. 134 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்தத் தேசிய நெடுஞ்சாலை 34இன் துணைச் சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை-134 உத்தரகண்ட் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[1][2][3]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

வழித்தடம்

தாராசு-குத்னூர்-யமுனோத்ரி [1]

சந்திப்புகள்

தே.நெ. 34 தாராசு அருகே முனையம் [1]

சில்கியாரா பெண்ட்-பார்கோட் சுரங்கப்பாதை

உத்தரகண்ட் மாநிலத்தில் சில்கியாரா பெண்ட்-பார்கோட் சுரங்கப்பாதை அமைப்பதற்குப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பிப்ரவரி 2018இல் ஒப்புதல் அளித்தது. இந்தச் சுரங்கப்பாதை 4.531 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரு வழித்தடமாகும். இரு திசைகள் மற்றும் அணுகுமுறைகள் உட்பட அவசரக்காலப் பாதைகளுடன் இச்சாலை இருக்கும். இத்திட்டத்தின் மொத்தத் திட்டச் செலவு ரூ. 1383.78 கோடி ஆகும். இதில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு ரூ. 1119 கோடி செலவாகும். இந்தச் சுரங்கப்பாதை தாரசுவிலிருந்து யமுனோத்ரி வரையிலான பயணத் தூரத்தைச் சுமார் 20 கிலோமீட்டர்கள் (12 மைல்) குறைக்கும் மற்றும் பயண நேரத்தைச் சுமார் ஒரு மணி நேரம் குறைக்கும். மேலும் அனைத்து வானிலை நிலவும் நேரத்திலும் பயணம் செல்ல ஏற்றதாக அமையும்.[4]

நவம்பர் 12, 2023 அன்று, கட்டுமானத்திலிருந்தபோது சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து. இதில் 41 சுரங்கப்பாதை தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.[5][6] மீட்பு நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு, 16 நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 28 அன்று வெற்றிகரமாக மீட்புப்பணிகள் முடிவடைந்தன.[7][8]

மேலும் காண்க

  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads