தேஜோபிந்து உபநிடதம்

யோகக் கலையைப் பற்றிய இந்து சமய உரை From Wikipedia, the free encyclopedia

தேஜோபிந்து உபநிடதம்
Remove ads

தேஜோபிந்து உபநிடதம் ( Tejobindu Upanishad ) என்பது சமசுகிருதத்தில் இயற்றப்பட்ட இந்து சமயத்தின் உபநிடத நூல்களின் தொகுப்பில் உள்ள ஒரு சிறிய உபநிடதம் ஆகும்.[1] ஐந்து பிந்து உபநிடதங்களில் ஒன்றான இது அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [2] மேலும், நான்கு வேதங்களில் உள்ள இருபது யோக உபநிடதங்களில் ஒன்றாகும்.[3][4]

விரைவான உண்மைகள் தேஜோபிந்து உபநிடதம், தேவநாகரி ...

தியானத்தில் கவனம் செலுத்துவது, புத்தகக் கற்றலுக்கான அர்ப்பணிப்பை குப்பை என்று அழைப்பது, அதற்குப் பதிலாக பயிற்சியை வலியுறுத்துவது மற்றும் யோகா கண்ணோட்டத்தில் வேதாந்தக் கோட்பாட்டை முன்வைப்பது ஆகியவற்றிக்காக இந்த உரை குறிப்பிடத்தக்கது. [5] இது 108 உபநிடதங்களின் நவீன காலத் தொகுப்பில் இராமனால் அனுமனுக்கு கூறப்பட்ட முக்திகா நியதியின் வரிசை வரிசையில் 37 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. [6]

Remove ads

பெயரிடல்

"பிரம்மனின் சக்தியைக் குறிக்கும் புள்ளி" என்று பொருள்படும், இதில் புள்ளி ஓம் என்பதில் உள்ள அனுசுவரம்[2] என ஜெர்மானிய இந்தியவியலாளர் பால் டியூசென் கூறுகிறார். இது சில சமயங்களில் பூனா கையெழுத்துப் பிரதிகளில் தேஜபிந்து உபநிடதம் என உச்சரிக்கப்படுகிறது. [7]

காலவரிசை

தேஜோபிந்து உபநிடதமும் உபநிடதம் பண்டையத் தோற்றம் கொண்டது என்று உரோமானிய வரலாற்றாளர் மிர்சியா எலியாட் கூறுகிறார். பின்வரும் இந்து நூல்கள் இயற்றப்பட்ட அதே காலகட்டத்திற்கு அதன் தொடர்புடைய காலவரிசையையும் அவர் வைக்கிறார் - மைத்ராயனிய உபநிடதம், மகாபாரதத்தின் போதனையான பகுதிகள், தலைமை சந்நியாச உபநிடதங்கள் மற்றும் பிற ஆரம்பகால யோக உபநிடதங்களான. பிரம்மபிந்து, பிரம்மவித்யா,யோகதத்துவம், நாதபிந்து, யோகசிகம், சுரிகா மற்றும் அமிர்தபிந்து போன்றவை. எலியாட் பரிந்துரைகள் இவற்றை கிமு இறுதி நூற்றாண்டுகளில் அல்லது கி பி.யின் ஆரம்ப நூற்றாண்டுகளில் வைக்கின்றன. இவை அனைத்தும், யோக-குண்டலி, வராகம் மற்றும் பாசுபதபிரம்ம உபநிடதங்கள் போன்ற பத்து அல்லது பதினொரு யோக உபநிடதங்களை விட முன்னதாகவே இயற்றப்பட்டிருக்கலாம் என்று எலியாட் கூறுகிறார்.[8]

சைவம் மற்றும் ஒப்பீட்டு மதங்களின் பிரித்தானிய அறிஞர் கவின் பிளட் தேஜோபிந்து உரை, மற்ற யோக உபநிடதங்களுடன், கிமு 100 முதல் கிபி 300 வரை இருக்கலாம் என்று தேதியிடுகிறார். [9]

Remove ads

உள்ளடக்கம்

இந்த உரை ஐந்து பிந்து உபநிடதங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாகும். ஐந்தில் இது மிக நீளமானது. நாதபிந்து உபநிடதம், பிரம்மபிந்து உபநிடதம், அமிர்தபிந்து உபநிடதம் மற்றும் தியானபிந்து உபநிடதம் என்பவை மற்ற நான்கு உபநிடதங்களாகும். இவை அனைத்தும் அதர்வண வேதத்தின் ஒரு பகுதியாகும். பிந்து உபநிடதங்கள் ஐந்தும் ஆன்மாவை (சுயம்) தொடர ஓம் உடன் யோகா மற்றும் தியானப் பயிற்சியை வலியுறுத்துகின்றன. [10] மற்ற எல்லா யோக உபநிடதங்களைப் போலவே, இதன் உரையும் கவிதை வசன வடிவில் இயற்றப்பட்டுள்ளது.[11]

தியானத்தைக் கடைபிடிப்பது கடினமானது என்று வலியுறுத்துவதன் மூலம் உரை தொடங்குகிறது. [12] ஞானிகளும் தனியாக இருப்பவர்களும் கூட, தியானத்தை நிறுவுவது, செயல்படுத்துவது மற்றும் நிறைவேற்றுவது கடினம் என்று உரை கூறுகிறது. [13]

வெற்றிகரமாக தியானம் செய்வது எப்படி?

தியானத்தில் வெற்றிபெற, ஒருவர் முதலில் கோபம், பேராசை, காமம், இணைப்புகள், எதிர்பார்ப்புகள், மனைவி மற்றும் குழந்தைகளைப் பற்றிய கவலைகளை வெல்ல வேண்டும் என்று உரை வலியுறுத்துகிறது.[13][14] சோம்பலைக் கைவிட்டு நல்லொழுக்கமான வாழ்க்கையை நடத்த வேண்டுமென இது வலியுறுத்துகிறது.[15] மாயைகளை கைவிடவும், ஆசைப்படாமல் இருக்கவும், உண்ணும் உணவில் நிதானமாக இருக்கவும் கூறுகிறது.[16] ஒரு குருவைக் கண்டுபிடித்து, அவரை மதிக்கவும், அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முயல வேண்டும் என்று உரை கூறுகிறது. [13]

இதனையும் பார்க்கவும்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads