தேர்ந்தெடுக்கும் முகவர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேர்ந்தெடுக்கும் முகவர் (selectable marker) என்பது மூலக்கூற்று உயிரியலில் பயன்படுத்தப்படும் ஒரு மரபணு ஆகும். பொதுவாக இவ்வகையான மரபணுக்கள் நாம் வளருணவில் (media) இடும் மருந்துகளை எதிர்த்து வாழும் தன்மை அல்லது எளிதாக கண்டுபிடிப்பதர்க்காக மிளிரும் தன்மையெய் கொண்டு இருக்கும். தேர்ந்தெடுக்கும் முகவர்கள் நாம் பயன்படுத்தும் கணிமி (Plasmid) பொருத்து அமையும். அம்பிசிலின், கனமைசின், போன்ற மருந்துகள் பக்டிரியாவை தேர்ந்தெடுக்க பயன்படும் சில வகையான மருந்து ஆகும். சில கணிமிகளில் இம்மருந்துகளை எதிர்த்து வாழும் தன்மை கொண்ட மரபணுக்கள் கொண்டு இருக்கும் (பீட்டா-லாக்டமேசு (beta lactamase), நியோமைசின் டிரன்சுபெரசு (Neomycin transferase).இவைகள் தேர்ந்தெடுக்க பயன்படும் உயிரினங்களை பொருத்து, பல வகையாக பிரிக்கலாம்.

Remove ads

பக்டிரியா தேர்ந்தெடுக்கும் முகவர் -Bacterial selection marker

இவைகள் பக்டிரியல் படிவாக்கம் தின் போது இ.கோலி கலங்களை தேர்ந்தெடுக்க உதவ வல்லன. எ. கா.

அம்பிசிலின்

கனமிசின்

டெட்ராசைகிளின்

விலங்கு உயிரணு தேர்தெடுக்கும் முகவர் mammalian selection marker

விலங்கு உயிரணு செய்முறைகளில் சில வகையான மருந்துகளை எதிர்த்து வாழும் தன்மையெய் நாம் கொடுக்கும் பரப்பிகள் கொண்டு இருப்பதால் , எளிதாக நாம் விரும்பும் உயிரணுக்களை தேர்ந்தெடுக்கலாம். எ.கா. சி418 (G418)

பயிர் தேர்தெடுக்கும் முகவர் Plant selection marker

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை தேர்தெடுக்கவும் இவைகள் பயன்படுகின்றன.Ex. கனமிசின்.

சிலவேளைகளில் பச்சை மிளிரும் புரதம் கூட, தேர்தெடுக்கும் முகவர்களாக பயன்படுத்தப்படும்.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் தேர்தெடுக்கும் முகவர்கள் பயன்படுத்தபடுவதால், ஆய்வாளர்கள் அவைகளால் தீங்கு ஏற்படக்கூடும் என கவலைகள் தெரிவிக்கின்றனர். மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், திறந்தவெளியில் அறுவடைக்கு வரும்போது, இயல் பயிருக்கும் , மரபணு மாற்றப்பட்ட பயிருக்கும் இடையே ஏற்படும் மகரந்த சேர்க்கையால் தாவரத்தின் மெய்யான நிறப்புரியில் மாற்றம் ஏற்பட்ட வாய்ப்புகள் மிகையாக உள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கும் முகவர்கள் உள்ள பயிர்களை உணவாக உட்கொள்ளும்போது, நமது பெருங்குடலில் உள்ள நிலைகருவற்ற உயிர்கள் ஒரு குறிபிட்ட எதிர்மருந்தை எதிர்த்து வாழும் தன்மை அடைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் பின்னாளில் நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர்களும் எதிர்மருந்தை எதிர்த்து வாழும் தன்மை கொண்டால், மாந்த இனத்துக்கு பேரிடர் உண்டு என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கும் முகவர் சாரா (Marker free plant) பயிரும் கொண்டுவரப்பட்டுள்ளது.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads