தேவசேனன் (வாகாடக வம்சம்)

வாகாடக வம்ச மன்னன் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேவசேனா ( Devasena ) ( ஆட்சி 455 – 480 பொ.ச. [1] ) வாகாடக வம்சத்தின் வதசகுல்மக் கிளையின் ஆட்சியாளர் ஆவார். இவர் இரண்டாம் சர்வசேனனின் மகனும் வாரிசுமாவார்.

விரைவான உண்மைகள் தேவசேனன், ஆட்சிக்காலம் ...

வரலாறு

தேவசேனனின் ஆட்சியில் வத்சகுல்ம வாகாடகர்களின் அதிகாரம் மற்றும் செல்வாக்கின் மீள் எழுச்சியைக் கண்டதாகத் தெரிகிறது. மேலும் அஜந்தா கல்வெட்டுகள் மன்னன் தேவசேனனைப் பற்றி ஒளிரும் சொற்களில் பேசுகின்றன. [2] இவரது முன்னோடிகளான இரண்டாம் பிரவரசேனன், இரண்டாம் சர்வசேனன் ஆகியோர் 'மஹாராஜா' என்ற எளிய பட்டத்தை பெற்றிருந்ததைப் போலல்லாமல், தேவசேனன், விந்தியசக்தியால் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட 'தர்மமஹாராஜா' என்ற பட்டத்தை மீட்டெடுத்தார். [3] தேவசேனன் தனது இராச்சியத்தை தெற்கே கருநாடகா வரை விரிவுபடுத்தியிருக்கலாம். ஏனெனில் இவரது சில செப்புத் தகடுகள் வடக்கு கருநாடகாவின் பீதர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. [4] கிழக்கில், தேவசேனன் விஷ்ணுகுந்தினர்களுடன் உறவுகளை ஏற்படுத்தினார், விஷ்ணுகுந்தின மன்னன் இரண்டாம் மாதவவர்மனுக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுத்தார். [5]

Remove ads

கல்வெட்டு

தேவசேனனின் ஆட்சிக்காலம் ஹிஸ்ஸே-போராலா கல்வெட்டுக்கு குறிப்பிடத்தக்கது. சாலிவாகன சகாப்தத்தின் 380 ஆம் ஆண்டைக் கொண்ட இந்த கல்வெட்டு (கி.பி 457-58 உடன் தொடர்புடையது) வாகாடக வம்ச வரலாற்றிற்கு உறுதியான காலவரிசையை வழங்கும் ஒரே பதிவாகும். [6] இந்த கல்வெட்டு தேவசேனனின் தலைநகரான வத்சகுல்மாவிற்கு ( இன்றைய வாஷிம் ) தெற்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுவாமில்லதேவன் என்ற பிரபு ஒரு குளம் கட்டியதைப் பதிவு செய்கிறது. இந்த தொட்டிக்கு 'சுதர்சனம்' என்று பெயரிடப்பட்டது. இது அவரது நினைவாக பிரபாவதிகுப்தாவின் குழந்தைகளால் கட்டப்பட்ட நீர்த்தேக்கத்தின் பெயராகும், மேலும் இது குசராத்தில் உள்ள ஜூனாகத்தின்]] புகழ்பெற்ற சுதர்சன ஏரியால் ஈர்க்கப்பட்டிருக்கலாம். [5] அஜய் மித்ரா சாஸ்திரி, சுவாமில்லதேவன் முதலில் குசராத்தைச் சேர்ந்தவர் என்றும், குசராத்தில் அந்தக் நாட்காட்டி சகாப்தம் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக ஹிஸ்ஸே-போராலா கல்வெட்டில் சாலிவாகன நாட்காட்டி சகாப்தத்தைப் பயன்படுத்தினார் என்றும் நம்புகிறார். [7]

Remove ads

நிர்வாகம்

தேவசேனன் தனது இராச்சியத்தின் நிர்வாகத்தை திறமையானவரும் பிரபலமானவருமான தனது மந்திரி அஸ்திபோஜன் என்பவரிடம் ஒப்படைத்தார். [8] அஸ்திபோஜனின் மகன் வராகதேவன், தேவசேனனின் மகனும் வாரிசுமான அரிசேனனின் அமைச்சராகப் பணியமர்த்தப்பட்டதையும் நாம் பின்னர் காண்கிறோம். [9] [10] [11] தேவசேனனின் ஆட்சியில் பல பிரபுக்கள் மற்றும் குடும்பங்கள் வாகாடக அரசவையில் பெரும் அந்தஸ்துக்கு உயர்ந்ததைக் கண்டது. மேலும் அவர்கள் அர்சேனனனின் ஆட்சியில் தொடர்ந்து செல்வாக்கு பெற்றனர்.

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads