விந்தியசேனன்

வாகடக வம்ச மன்னன் From Wikipedia, the free encyclopedia

Remove ads

விந்தியசேனன் (Vindhyasena) (ஆட்சிக் காலம் சுமார் 355 – 400 பொ.ச. [1] ), இரண்டாம் விந்தியசக்தி என்றும் அழைக்கப்படும் இவர்,[2] வாகடகா வாகாடக வம்சத்தின் வத்சகுல்ம கிளையின் ஆட்சியாளர் ஆவார். இவர் முதலாம் சர்வசேனனின் மகனும் வாரிசுமாவார்.

விரைவான உண்மைகள் விந்தியசேனன், ஆட்சிக்காலம் ...
Remove ads

வரலாறு

விந்தியசேனன் தனது முப்பத்தி ஏழாவது ஆட்சியாண்டில் தனது தலைநகரான வதசகுல்மாவில் இருந்து ஒரு சாசனத்தை வெளியிட்டதால், நீண்ட காலம் ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.[3] சாசனம் நந்திகட்டா என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தின் மானியத்தைப் பதிவுசெய்கிறது. இது நாந்தேடுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அஜந்தாவில் உள்ள ஒரு கல்வெட்டு, பிற்கால கதம்பர் வம்ச மன்னரான அரிசேனனின் காலத்திலிருந்து, வடக்கு கருநாடகாவில் இருந்த குந்தள ஆட்சியாளர்களுக்கு எதிராக விந்தியசேனனின் வெற்றியைப் பதிவுசெய்கிறது.[4] பெராரின் ( விதர்பா ) தெற்குப் பகுதி, நாசிக், அகமது நகர், புனே, சாத்தாரா போன்ற மாவட்டங்களையும்,[5] மராத்வாடா பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு பரந்த அரசை விந்தியசேனன் ஆட்சி செய்தார்.[4]

இவரது சமகாலத்தவனும் உறவினனுமான முதலாம் வாகாடக கிளையைச் சேர்ந்த பிரிதிவிசேனன் வடக்கே ஆட்சி செய்து வந்தான். வம்சத்தின் இரண்டு கிளைகளுக்கும் இடையிலான உறவு இந்த நேரத்தில் மிகவும் சுமூகமாக இருந்ததாகத் தோன்றுகிறது. முக்கிய கிளையான வத்சகுல்மா கிளையின் மீது பெயரளவு மேலாதிக்கத்தை அனுபவித்து வந்தது. [6] விந்தியசேனன் குந்தள நாட்டைக் கைப்பற்ற, பிருதிவிசேனன் இவருக்குப் பொருள் உதவி வழங்கியிருக்கலாம்.[7] இவரது மரணத்திற்குப் பிறகு, இவரது மகன் இரண்டாம் பிரவரசேனன் ஆட்சிக்கு வந்தான்.[5]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads