தேவனாஞ்சேரி
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேவனாஞ்சேரி (ஆங்கிலம்: Devanancheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.
Remove ads
அமைவிடம்
தேவனாஞ்சேரி தஞ்சாவூரிலிருந்து வடக்கே 42 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 8 கி. மீ. தொலைவிலும் சென்னையில் இருந்து 282 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.அத்தியூர் (Athiyur)(2 கி.மீ.), கல்லூர் (3 கி.மீ.), நீரத்தநல்லூர் (3 கி.மீ.), திருநல்லூர் (1 கிமி) ஆகியவை அருகில் உள்ள கிராமங்கள்.தேவனாஞ்சேரி கிழக்கு நோக்கி திருவிடைமருதூர் வட்டம், தெற்கு நோக்கி கும்பகோணம் தாலுகா, மற்றும் தெற்கு நோக்கி வலங்கைமான் தாலுக்கா, கிழக்கு நோக்கி திருப்பணந்தாள் தாலுகா சூழப்பட்டுள்ளது.
Remove ads
மக்கள்தொகை
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அத்தியூரில் 1376 ஆண்கள் மற்றும் 1361 பெண்கள் 2737 மொத்த மக்கள் தொகை ஆக இருந்தது.எழுத்தறிவு விகிதம் 68.07 ஆக இருந்தது.இது கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் கீழ் வருகிறது.
விவசாயம்
கிராம மக்கள் வருவாய் விவசாயம் சார்ந்து இருக்கிறது.விவசாயத்திற்கு "மண்ணியாறு" மற்றும் மோட்டார் (பம்புசெட்) போன்றவை நீர்ப்பாசனம் வழங்குகிறது. தேவனாஞ்சேரியில் நெல்,கோதுமை, பயிறு வகைகள், எள், நிலக்கடலை சவுக்கு மரம், பழங்கள், மிளகாய், வாழை மரம் மற்றும் கரும்பு பயிரிடப்படுகிறது.
கல்வி
ஆரம்ப மற்றும் உதவி பெறும் நடுநிலை பள்ளி,மினர்வா ஆரம்ப மற்றும் மேல்நிலை பள்ளி கல்வி வழங்குகிறது. கல்லூரிகள்: அன்னை கலை மற்றும் அறிவியல் அன்னை கல்லூரி முகவரி: கள்ளபுலியூர் கிராமம் கும்பகோணம் தஞ்சாவூர்.
எஸ்.கே.எஸ்.எஸ் கலை கல்லூரி முகவரி: திருப்பனந்தாள் கும்பகோணம் தஞ்சாவூர்.
மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முகவரி:கள்ளபுலியூர் கிராமம் கும்பகோணம் தஞ்சாவூர்.
அரசு பொறியியல் கல்லூரி முகவரி: கள்ளபுலியூர் கிராமம் கும்பகோணம் தஞ்சாவூர்.
Remove ads
போக்குவரத்து
கும்பகோணம் ரயில் நிலையம் தேவனாஞ்சேரி மிக அருகில் உள்ள ரயில் நிலையமாகும். எனினும் தஞ்சாவூர் ரயில் நிலையம் தேவனாஞ்சேரியின் அருகில் உள்ள பெரிய ரயில் நிலையமாகும், 44 கி.மீ. தொலைவில் உள்ளது.கிராம மற்றும் நகர பகுதி போக்குவரத்துக்கான முக்கிய பேருந்து முனையம் கும்பகோணத்தில் உள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் நவீன விமான நிலையங்கள் உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads