தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா

From Wikipedia, the free encyclopedia

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா
Remove ads

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா (Debiprasad Chattopadhyaya, நவம்பர் 19, 1918மே 8, 1993) இந்திய மார்க்சியப் புலமையாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இந்திய மெய்யியல் மரபு குறித்து மிக முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.இவருடைய மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பு உலகாயதம்-பண்டை இந்தியப் பொருள்முதல் வாதம் பற்றிய ஓர் ஆய்வு.பண்டைய இந்திய அறிவியல், தொழில்நுட்ப வரலாற்றிலும் மிக முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.[1][2][3]

விரைவான உண்மைகள் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

கொல்கத்தா பாவனிபூர் மித்ரா நிலையத்தில் தொடக்கப் பள்ளிக் கல்வியையும், கொல்கத்தா மாநிலக் கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மெய்யியலையும் கற்றார். 1939–1942 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் B.A. (Honours), M.A. ஆகிய பட்ட வகுப்புகளில் முதலிடம் பெற்றுத் தேர்ச்சியடைந்தார்.ஜார்ஜ் தாம்சனின் ஆய்வுமுறையைப் பின்பற்றி உலகாயதம் பற்றி ஆய்வு செய்தார்.கொல்கத்தா நகரக் கல்லூரியில்(city colleage)நெடுங்காலம் மெய்யியலைப் போதித்தார்.

Remove ads

தமிழில் வெளிவந்துள்ள இவருடைய நூல்கள்

  1. உலகாயதம்
  2. இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்
  3. இந்தியத் தத்துவ இயல்-ஓர் எளிய அறிமுகம்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads