1993
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1993 (MCMXCIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். அனோ டொமினியின், அல்லது பொது ஊழியின், 1993வது ஆண்டாகும்; இரண்டாம் ஆயிரமாண்டின் 993வது ஆண்டாகும்; இருபதாம் நூற்றாண்டின் 93வது ஆண்டாகும்; 1990களின் நான்காவது ஆண்டாகும்.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- ஜனவரி 1 - செக்கோசிலாவாக்கியா கலைக்கப்பட்டு ஸ்லோவாக்கியாவும் செக் குடியரசும் அமைக்கப்பட்டது.
- ஜனவரி 2 - ஈழப் போர்: இலங்கைக் கடற்படையால் கச்சாய் கடல் நீரேரியில் 35-100 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர்.
- ஜனவரி 3 - மாஸ்கோவில், ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் மற்றும் போரிஸ் யெல்ட்சின் இரண்டாம் படைகள் குறைப்பு உடன்படிக்கையினை கையொப்பமிட்டனர்.
- ஜனவரி 6 - 20 – பம்பாய் கலவரம் வெடித்தது.
- ஜனவரி 19 - வேதி ஆயுத உடன்படிக்கை (CWC) கையொப்பமிடப்பட்டது.
- ஜனவரி 19 - ஐபிஎம் நிறுவனம் 1992 ஆண்டிற்கான அறிக்கையில் $4.97 பில்லியன் நஷ்டத்தினை அறிவித்தது, இன்றுவரையில் அமெரிக்காவில் வெறொரு நிறுவனம் இந்த அளவில் நஷ்டம் அடைந்ததில்லை.
- ஜனவரி 20 - பில் கிளின்டன் அமெரிக்காவின் 42ஆவது அதிபரானார்.
- ஜனவரி 24 - துருக்கியில், உகுர் மம்கு என்னும் செய்தி நிருபர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆயிரக்கணக்காணோர் கண்டனம் செய்தனர்.
- ஜனவரி 26 - வாக்லாவ் அவொல் செக் குடியரசின் குடியர்சுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- பெப்ரவரி 4 - ஆஸ்திரிய சுதந்திரக் கட்சியின் வலக்கை ஆசுதிரியா உறுப்பினர்கள் பிரிந்து தாராண்மையாளர் மன்றத்தினை ஆரம்பித்தனர்.
- பெப்ரவரி 17 - எயிட்டியில் கப்பல் கவிழ்ந்தது. அக்கப்பலில் பயணித்த 1,500 பயணிகளில் 1215 பேர் இறந்தனர்.
- பெப்ரவரி 24 - கனடிய பிரதமர் பிரையன் மல்ரோனி ராஜினாமா செய்தார். கிம் காம்ப்பெல் கனடாவின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.
- பெப்ரவரி 26 - உலக வர்த்தக மைய குண்டுவெடிப்பு: நியூயார்க் நகரத்தில், உலக வர்த்தக மையம் வடக்கு கோபுரம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் இருந்த குண்டு வெடித்ததில் ஆறு பேர் இறந்தனர், ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- மார்ச் 12
- 1993 மும்பை குண்டுவெடிப்புகள்: பல குண்டுகள் பம்பாயில் வெடித்தன. 257 கொல்லப்பட்டனர், மேலும் பல நூறு பேர் காயமடைந்தனர்.
- வடகொரிய அணு ஆயுத திட்டம்: வடகொரியா அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது.
- ஏப்ரல் 23 - இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பு குண்டுவெடிப்பில் பலி.
- ஏப்ரல் 23 - ஆப்பிரிக்காவின் ஒரு நாடான எரித்திரியா சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடத்தியது.
- செப்டெம்பர் 29 - மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 10,000 பேர் பலி.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
நோபல் பரிசுகள்
- வேதியியல் – கேரி முல்லிஸ், மைக்கல் ஸ்மித்
- பொருளியல் – ராபர்ட் ஃபோகல், டக்லஸ் நார்த்
- இலக்கியம் – டோனி மாரிசன்
- அமைதி – நெல்சன் மண்டேலா மற்றும் பிரெட்ரிக் நில்லெம் டி கிலர்க்
- இயற்பியல் –ரஸ்சல் ஆலன் ஹல்ஸ், ஜோசப் ஹூடன் டெயிலர் ஜூனியர்
- மருத்துவம் – ரிச்சர்ட் ராபர்ட்ஸ், பிலிப் ஆலன் ஷார்ப்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads