தைட்டானியம்(III) ஆக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தைட்டானியம்(III) ஆக்சைடு (Titanium(III) oxide) என்பது Ti2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் தைட்டானியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் தைட்டானியம்(III) ஆக்சைடு அலுமினியம் ஆக்சைடின் படிகஅமைப்புகளில் ஒன்றான குருந்தத்தின்[1] படிக அமைப்புடன் காணப்படுகிறது. 1600°செ வெப்பநிலையில் [1]தைட்டானியம் ஈராக்சைடுடன் உலோக தைட்டானியம் சேர்த்து வினைபுரியச் செய்தால் தைட்டானியம்(III) ஆக்சைடு தயாரிக்க முடியும். ஆக்சிசனேற்றம் செய்யும் தன்மை கொண்ட அமிலங்களுடன்[1] இது வினைபுரிகிறது. 200 °செ வெப்பநிலையில் குறைகடத்தி நிலையில் இருந்து உலோகக் கடத்தி என்ற நிலைக்கு தைட்டானியம்(III) ஆக்சைடு நிலைமாற்றம் அடைகிறது[1].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads