தைட்டானியம் நைட்ரேட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தைட்டானியம் நைட்ரேட்டு (Titanium nitrate) என்பது Ti(NO3)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்றும் டயாகாந்தப் பண்பும் கொண்டதாக காணப்படும் இத்திண்மம் எளிதில் பதங்கமாகிறது. எளிதில் ஆவியாகக்கூடிய இரும இடைநிலை உலோக நைட்ரேட்டுக்கு இச்சேர்மம் ஒரு உதாரணமாகும். தைட்டானியம் அல்லது அதன் ஆக்சைடுகளை நைட்ரிக் அமிலத்தில் கரைப்பதன் மூலம் இதை தயாரிக்கலாம்.
Remove ads
தயாரிப்பு
அசலான தைட்டானியம் நைட்ரேட்டு தயாரிப்பு முறை போலவே [2][3] தைட்டானியம் டெட்ராகுளோரைடு சேர்மத்தை டைநைட்ரசன் பெண்டாக்சைடைப் பயன்படுத்தி நைட்ரோயேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம் [4]
- TiCl4 + 4 N2O5 → Ti(NO3)4 + 4 ClNO2
தைட்டானியம் சேர்மங்களை நைட்ரிக் அமிலத்தில் கரைத்து நீரேறிய தைட்டானியம் நைட்ரேட்டை உற்பத்தி செய்யலாம்.[5]
கட்டமைப்பு
தைட்டானியம் நைட்ரேட்டு D2d சீரொழுங்குடன் நான்கு இருபல் நைட்ரேட்டு ஈந்தணைவிகளை கொண்ட ஓர் அணைவுச் சேர்மமாகும். N-O பிணைப்புகளுக்கு இடையில் ஒருங்கிணைவற்ற 1•29 மற்றும் 1•185 Å தொலைவு இடைவெளி காணப்படுகிறது[6].
இயற்பியல் பண்புகள்
அகச்சிவப்பு நிறமாலையில் 1635 cm−1 இல் இது வலிமையாக ஈர்க்கப்பட்டு N-O பிணைப்பை அதிர்வு முறைக்கு ஒதுக்குகிறது [7]
சிலிக்கன் டெட்ராகுளோரைடு, கார்பன் டெட்ராகுளோரைடு போன்ற முனைவற்ற கரைப்பான்களில் இது கரைகிறது [8][3].
வினைகள்
தைட்டானியம் நைட்ரேட்டு ஓர் ஈரமுறிஞ்சியாகும். ஆனால் ஒரு தெளிவற்ற நீரேற்றாகவே இது வரையறுக்கப்படுகிறது[9]. நீரிலி நிலையில் இது ஐதரோ கார்பன்களுடன் கூட வினைத்திறன் மிக்கதாக உள்ளது[9] தைட்டானியம் நைட்ரேட்டு என்-டோடெக்கேனுடன் கூட வினையில் ஈடுபடுகிறது.[10]. மேலும் இது பாரா- டைகுளோரோபென்சீன்ம் அனிசோல், பைபீனைல் போன்ற சேர்மங்களோடும் சேர்ந்து வினையில் ஈடுபடுகிறது.[10][11]
வெப்பச் சிதைவு வினையின் மூலமாக இது தைட்டானியம் ஆக்சைடாக சிதைவடைகிறது[12]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads