தைரியம் (திரைப்படம்)
2010 இந்தியத் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தைரியம் ( Thairiyam) என்பது 2010 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளிவந்த திரைப்படமாகும். ஆர்.பி. கிரியேஷன்ஸ் தயாரித்த இந்தத் திரைப்படத்தை பி.குமரன் இயக்கியுள்ளார். தீபூ கார்த்திகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படம் 29 ஜனவரி 2010 அன்று வெளியிடப்பட்டது[1]
குமரன் தனது காதலியான தீபுவை ரியாசிடமிருந்து ஏற்படும் ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார். குமரனுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பின், ரியாஸ் நினைவிழந்து விடுகிறார், ஆனால், ரியாஸின் அனைத்து நண்பர்களும் ஒரு சூழ்ச்சியினால் கொல்லப்படுகிறார்கள் என்ற உண்மை தெரியவருகிறது. பல திருப்பங்களுக்கு பிறகு தீய எண்ணம் கொண்ட வில்லன் காமராஜின் கதை எவ்வாறு முடிகிறது.
Remove ads
நடிகர்கள்
- பி.குமரன்- குமரனாக
- தீபு - ரம்யாவாக
- ஜெனிப்பராக கார்திகா அடைக்கலம்
- தீபா வெங்கட் ராதாரவி அஜய் ரத்தினம்
- ரியாஸ் கான் பாண்டியராஜன்
- பொன்னம்பலம்
- பிரகதி[2]
தயாரிப்பு
இப்படத்தின் இயக்குநர் எம்.எஸ். சரோஜ்குமார் என்பவர் இயக்கிய இப்படம் வெளியீட்டின் போது பி.குமரன் இயக்கியதாக 2009இல் வெளிவந்தது. இறுதிக்காட்சியில் நடக்கும் ஒரு சண்டைக்காட்சியில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களைக் கொண்டு 15 நாட்களுக்கு படமாக்கப்பட்டது..[3]
வெளியீடு
இப்படம் பொதுவாக தமிழ்நாடு முழுவதும் ஒரு குறைந்த சராசரியான வசூலையே பெற்றது. சென்னையில் ஆரம்ப வார இறுதியில் ரூபாய் 3,46,944 மட்டுமே வசூல் செய்தது.[4]
விமர்சனம்
முதல் முயற்சியென்பதால் சரியென தி இந்து நாழிதல் எழுதியது.[5] குமரன் சோதனையை கடந்து சென்றாலும், அவர் தனது அலங்காரம் குறித்து கவனமாக இருக்க வேண்டும்" என்று கூறியது. ரம்யாவாக நடிகை தீபூ "சராசரியாக" இருப்பதோடு கதாநாயகியைவிட அதிக காட்சிகளைப் பெறுகிறார். ஜெனிஃபர் எனும் கார்த்திகா பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறார். ஆனால் படத்தில் சரியாக நடிக்கவில்லை. தயாரிப்பு சம்பந்தமாக, இப்படத்தில் குமரன் கதை, திரைக்கதை, உரையாடல், நடிப்பு, இயக்குதல் மற்றும் தயாரித்தல் போன்ற பல பணிகளை மேற்கொண்டுள்ளார் எனவும் எழுதியது[5]
Remove ads
ஒலிதொகுப்பு
அறிமுக இசையமைப்பளர் ஆர். டி. மோகன் சிங் இசையமைத்துள்ளார். புகழ் பெற்ற பாடகர்களான ஹரிஷ் ராகவேந்திரா, திப்பு மற்ரும் தேவா ஆகியோரும் பாடியுள்ளானர்.
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads