ராதாரவி
இந்தியத் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராதாரவி ஒரு தமிழ் நாட்டு நடிகரும், பா.ஜ.க அரசியல்வாதியும் ஆவார். இவருடைய தந்தை பிரபல தமிழ் நடிகர் எம். ஆர். ராதா ஆவார். தற்போது தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் பதவில் இருக்கிறார். 2002-2006 காலகட்டத்தில் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார். சிறிது காலம் அதிமுகவிலிருந்து விலகியிருந்த அவர் 2010ல் மீண்டும் அக்கட்சியில் இணைந்தார்[2].
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
- இவர் ஜூலை 30ம் தேதி எம்.ஆர்.ராதாவுக்கும் தனலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். இவருக்கு எம். ஆர். ஆர். வாசு என்ற சகோதரனும், ரசியா, ராணி, ரதிகலா என்று மூன்று சகோதரிகளும் உள்ளனர்.
- இவருடைய தந்தை எம்.ஆர்.ராதா அவர்களின் மற்றொரு மனைவியான கீதா ராதாவிற்கு பிறந்தவர்கள் நிரோஷா, ராதிகா ஆவார்கள். தன் வாழ்க்கைப் பயணத்தினை நாடக நடிகராக தொடங்கினார். ஒன்பதாம் வகுப்பில் ஜூலியஸ் சீசராக நடித்தார். கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் இணைந்து நாடகத்தில் நடித்தார்.
- மேலும் வி. கே. ராமசாமி, எம்.ஆர்.ஆர்.வாசு, டி.கே.சந்திரன் மற்றும் யுஏஏ போன்றவர்களின் நாடகங்களில் நடித்தார். 1980ல் தனியாக ஒரு நாடக கம்பேனியை தொடங்கினார். ரகசிய ராத்திரி எனும் கன்னட படத்தின் மூலம் தன்னுடைய திரைவாழ்க்கையை தொடங்கினார். கமலின் அறிமுகத்தினால்.
- இவர் 1976 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த மன்மத லீலை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான முதல் திரைப்படமாக அமைந்தது.
- மேலும் தமிழ் திரையுலகில் டி. ராஜேந்தரரின் உயிருள்ளவரை உஷா என்ற படத்தில் முதன்முதலாக வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
- பின்பு வைதேகி காத்திருந்தாள், உயர்ந்த உள்ளம், சின்னத் தம்பி, பூவேலி , உழைப்பாளி, குரு சிஷ்யன் என தமிழ் திரையுலகில் பல வேடங்களில் தன் நடிப்பினை வெளிபடுத்தினார். வீரன் வேலுத்தம்பி என்ற படத்தில் நாயகனாகவும் நடித்தார்.
- இவர் தங்கை ராதிகாவின் தயாரிப்பான செல்லமே எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்திருந்தார்.
Remove ads
ராதாரவி நடித்துள்ள திரைப்படங்கள்
- மன்மதலீலை
- வீட்டுக்காரி
- காதல் ஓவியம்
- உயிருள்ளவரை உஷா
- சிவப்பு சூரியன்
- சூரக்கோட்டை சிங்கக்குட்டி
- பொய்கால் குதிரை
- இரு மேதைகள்
- மதுரை சூரன்
- அண்ணாமலை
- வீரன் வேலுத்தம்பி
- சின்ன முத்து
- அமரன்
- மருது
- பூமகள் ஊர்வலம்
- என்றென்றும் காதல்
தொலைக்காட்சியில்
நடித்துக்கொண்டிருக்கும் படங்கள்
- கடமை கண்ணியம் கட்டுப்பாடு
- சுரல
- சேது சமுத்திரம் [3]
- நல்வரவு
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads