தொடர்வண்டி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தொடர்வண்டி அல்லது தொடரி இலங்கை வழக்கு புகையிரதம் அல்லது தொடருந்துஆங்கிலம்: Train) என்பது பயணிகள் மற்றும் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்ல உதவும் ஒரு போக்குவரத்து வாகனம் ஆகும். இவ்வகை வாகனங்கள் தண்டவாளங்கள் எனப்படும். இரயில் பாதைகளில், தொடர்ச்சியாக இணைக்கப்பட்டுள்ள பெட்டிகள் அல்லது கூண்டுகளை இழுத்துச் செல்லல் என்ற அடிப்படையில் இயங்குகின்றன. பெட்டிகள் அல்லது கூண்டுகள் சுயமாக நகர்வதற்கான ஆற்றல் தனியாக இணைக்கப்பட்டுள்ள ஒரு இயந்திரம் மூலம் அவற்றுக்கு வழங்கப்படுகிறது. வரலாற்றில் நீராவி உந்துவிசை ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், தற்போது டீசல் மற்றும் மின்னியந்திரங்கள் பொதுவாக இழுவை இயந்திரங்களாகப் பயன்படுகின்றன. மின்னியந்திரங்களுக்கான மின்சக்தி மேல்நிலை கம்பிகள் அல்லது கூடுதல் இரயில் இயந்திரங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. குதிரைகள், நீருந்து கயிறு, இழுவைக்கம்பி, ஈர்ப்புவிசை, காற்றழுத்தம், மின்கலன்கள், மற்றும் வாயுச்சுழலிகள் போன்றவையும் இரயில் பெட்டிகல்ளை இழுப்பதற்கு ஆதாரமான சக்தி மூலங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.


இரயில் பாதைகள் வழக்கமாக இரண்டு இணையான தண்டவாளங்களைக் கொண்டு அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில் மின்சாரம் கடத்துவதற்கென்றும், ஒற்றைத் தண்டூர்திகளுக்காகவும், காந்தமிதவுந்துகளுக்காகவும் தனியாக தண்டவாளங்கள் இணைக்கப்படுவதுண்டு.[1] இழுத்தல் என்ற பொருள் கொண்ட trahiner என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லில் இருந்து டிரைன் என்ற சொல் உருவானதாகக் கருதப்படுகிறது. இலத்தீன் மொழியில் இழுத்தலுக்கு trahere என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.[2]
குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பல்வேறு வகையான இரயில்கள் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. பொதுவாக இரயில்களில் ஒன்றுடன் ஒன்றாக பலபெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அவை சுயமாக இயங்கக்கூடியவையாக அல்லது இழுவிசையால் நகரக்கூடியவையாக உருவாக்கப்படுகின்றன. தொடக்கக் கால இரயில்கள் கயிற்றால் கட்டி குதிரைகளால் இழுக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவி இயந்திரங்கள் மூலம் இரயில்கள் இழுக்கப்பட்டன. 1910 களில் நீராவி இயந்திரங்களுக்குப் பதிலாக டீசல் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இவ்வகை இயந்திரங்கள் சிக்கனமானதாகவும், குறைவான ஆள்பலத் தேவையும் உள்ளவகையாக இருந்தன.

பயணிகள் இரயில் என்பது பயணிகள் பயணம் செய்யும் இருப்புப் பாதை வாகனங்களை உள்ளடக்கியது ஆகும். மிக நீண்ட மற்றும் வேகமாக இயங்கும் இரயில்கள் இவ்வலை இரயில்களில் இருக்கும். ஒரு குறிப்பிடத்தக்க வேகத்துடன் நகரும் இரயில்கள் மற்றும் அதிகரித்து வரும் நீண்ட தூர இரயில் வகைகள் அதிவேக இரயில்கள் எனப்படுகின்றன, இவற்றின் வேகம் 500 கி.மீ. / மணி ஆகும். இச்செயல்பாட்டை அடைவதற்கு, புதுமையான காந்தத்தால் மிதக்கும் தொழில்நுட்பம் மூலம் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம் போன்ற பெரும்பாலான நாடுகளில், ஒரு டிராம்வே மற்றும் இரயில் இடையே உள்ள வேறுபாடு துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஒளி ரயில் என்பது சில நேரங்களில் நவீன டிராம் அமைப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
Remove ads
தொடர்வண்டிகளின் வகைகள்


நீராவித்தொடர்வண்டி, நிலக்கரித்தொடர்வண்டி, அகலப்பாதை தொடர்வண்டி, மீட்டர் பாதை தொடர்வண்டி, எலக்ட்ரிக் தொடர்வண்டி, பறக்கும் தொடர்வண்டி, மெட்ரோ தொடர்வண்டி, அதிவேக தொடர்வண்டி என பல வகைகள் உள்ளன.
தொடர்வண்டி பயணம் செய்யும் இடத்தை பொறுத்தும் சில வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை, புறநகர் தொடர்வண்டி, நகரத்தொடர்வண்டி.
தொடர்வண்டியின் வேகத்தை பொருத்தும் வகைகள் மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டு விரைவுத்தொடர்வண்டி, பயணிகள் தொடர்வண்டி.
பயன்பாட்டிற்கு ஏற்ப பலவகையான புகைவண்டிகள் புழக்கத்தில் உள்ளன.
பயணியர் தொடர் வண்டிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும் சரக்குத் தொடர்வண்டிகள் நிலக்கரி, பெட்ரோல், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படிகின்றன. இன்னும் சில இடங்களில் பயணிகள், சரக்கு இரண்டும் ஒரே தொடர் வண்டியில் கொண்டு செல்லப்படுகின்றன. தண்டவாளங்களை மராமத்து செய்வதற்காக சிறப்பு இரயில்களும் பயன்பாட்டில் உள்ளன.
ஐக்கிய இராச்சியத்தில், இரண்டு இயந்திரங்களால் இழுக்கப்படும் இரயில்கள் "இரட்டை தலை" வண்டிகள் என்று அழைக்கப்படுகின்றன. கனடாவிலும் அமெரிக்காவிலும் இதேபோல மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயந்திரங்களால் இழுக்கப்படும் இரயில்கள் பொதுவாகவே காணப்படுவதுண்டு. தொடர்வண்டியின் இரண்டு முடிவிலும் இயந்திரங்கள் இணைக்கப்பட்ட வகையும் பயன்படுத்தப்படுகிறது. இயந்திரத்தை திசை திருப்பி மாற்றும் வசதியில்லா இடங்களில் இவ்வகை வண்டிகள் பயன்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடர்வண்டில் மையப்பகுதியிலும் இவ்வகை இயந்திரங்கள் இணைக்கப்படுகின்றன.
Remove ads
உந்து ஆற்றல்
தொடர்வண்டி பயன்பாட்டிற்கு வந்த தொடக்க காலத்தில் குதிரைகளைக் கொண்டோ அல்லது புவியீர்ப்பு விசையினாலோ நகர்த்திச் செல்லப்பட்டன. பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவிப் பொறி பயன்படுத்தப்பட்டது. 1920களில் இருந்து நீராவி வண்டிகளின் பயன்பாடு டீசல் அல்லது மின் ஆற்றலைப் பயன்படுத்தும் வண்டிகளின் அறிமுகத்தால் குறைந்து வந்தது. தற்காலத்தில் ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் நீராவி வண்டிகள் வழக்கொழிக்கப்பட்டாலும் சில நாடுகளில் குறிப்பாக சீனாவில் பயன்பாட்டில் உள்ளது. எனினும் இவையும் சிறிது சிறிதாக நிறுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல நாடுகளில் வரலாற்றுச் சின்னமாக இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் நீலகிரி மலை இரயில், டார்ஜிலிங் மலை இரயில் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.
Remove ads
பயணியர் தொடர்வண்டி

பயணியர் தொடர்வண்டி என்பது பயணியர் பெட்டிகளைக் கொண்டிருக்கும். இவை பயணிகளை ஒரு இரயில் நிலையத்தில் இருந்து மற்றோர் நிலையத்திற்கு கொண்டு சேர்க்கின்றன. நிலையங்களுக்கு இடையேயான தொலைவு ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் இருந்து சில ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை இருக்கலாம். பயணநேரமும் நிமிடக்கணக்கில் இருந்து நாட்கணக்கு வரை மாறுபடும். இவற்றுள் பலவகைகள் உள்ளன.
- நெடுந்தொலைவு வண்டிகள் – நாட்டின் இருவேறு பகுதிகளுக்கு இடையே ஓடுகின்றன. சில இரு வேறு நாடுகளையும் இணைக்கின்றன.
- அதிவிரைவு வண்டிகள் – இவை பகல் நேரங்களில் பெரும்பாலும் இயக்கப்படுகின்றன. இவை பொதுவாக மக்கள் தொகை மிகுந்த பெருநகரங்களை இணைக்கின்றன. பிரான்சில் உள்ள டிஜிவி (TGV) என்னும் மிகுவிரைவு தொடர்வண்டி, ஏப்ரல் 3, 2007 அன்று, மணிக்கு 574.8 கிலோ. மீ சராசரி விரைவில் ஓடி, உலகில் ஒரு புதிய அரியசெயல் நிகழ்த்தியுள்ளது[3]
- நகரிடை வண்டிகள் – இடையில் நில்லாமல் குறிப்பிட்ட இரு நகரங்களை இணைக்கின்றன.
- பயணியர் இரயில்கள் – நகரங்களுக்கு உள்ளே மாணவர்கள், பணியாளர்கள் போன்ற மக்களின் அன்றாடப் போக்குவரத்துக்கான வண்டிகள் ஆகும்.
- தரைவழி தொடர்வண்டிகளும் சில இடங்களில் பயன்படுத்தப்படுய்கின்றன.
- பெரிய சுரங்கங்களுக்குள் சரக்கு மற்றும் பணியாளர்களை அழைத்துச் செல்லும் சுரங்க இரயில் வண்டிகளும் பயன்பாட்டில் உள்ளன.
- தொகுப்பாக அமைந்துள்ள வளாக விமானநிலையங்களில் இரு முனையங்களுக்கிடையிலான போக்குவரத்திற்காகவும் தொடர்வண்டி வகைகள் இயக்கப்படுகின்றன.
- இரயில்வே துறையின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் இரயில்வே துறையின் வரலாற்றை விளக்கும் காட்சி இரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒற்றைத் தண்டூர்தி


வழக்கமாக இரட்டைத் தண்டவாளங்களில் இயங்குவதற்குப் பதிலாக ஒரே தண்டவாளத்தைப் பயன்படுத்தும் இருப்புவழி போக்குவரத்து வகை அமைப்பாகும். 1897இல் ஒற்றைத் தண்டில் தொங்கியவாறு உயரத்தில் சென்ற அமைப்பொன்றை நிறுவிய செருமானியப் பொறியாளர் இதனை மோனோரெயில் என அழைத்தார்.[4] இத்தகையப் போக்குவரத்து பெரும்பாலும் தொடர்வண்டி எனவே அழைக்கப்படுகிறது.[5]
பொதுவழக்கில் உயரத்தில் அமைக்கப்படும் எந்தவொரு பயணியர் போக்குவரத்து அமைப்பும் ஒற்றைத் தண்டூர்தி என அழைக்கப்பட்டாலும்[6] முறையான வரையறைப்படி இது ஒரு தண்டவாளத்தில் இயங்கும் அமைப்புக்களை மட்டுமே குறிக்கிறது.[note 1]
Remove ads
சரக்குத் தொடர்வண்டி

சரக்குத் தொடர்வண்டிகள் சரக்குப் பெட்டிகளை இழுத்துச் செல்கின்றன. திட, நீர்மப் பொருட்களை எடுத்துச் செல்ல வெவ்வேறு பெட்டிகள் உள்ளன. உலகின் பெரும்பாலான சரக்குப் போக்குவரத்து தொடர்வண்டிகள் மூலமே நடைபெறுகிறது. சாலையை விட தொடர்வண்டியில் பொருட்களை எடுத்துச் செல்வது பயனுறுதிறன் மிக்கதாகும்.
சில நாடுகளில் சரக்குள்ள சரக்குந்துகளே நேரடியாக தொடர்வண்டியின் மீது வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் சரக்குகளை ஏற்றி இறக்கும் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் கொங்கண் இரயில்வேயில் இத்தகைய நடைமுறை உள்ளது.[7]
Remove ads
இலங்கையில் தொடர்வண்டி
இலங்கைக்கு ஆங்கிலேயரால் தொடர்வண்டி கொண்டுவரப்பட்டது. இது முதலில் பொருட்களை ஏற்றி செல்லவே பயன்பட்டது. பின்னர் இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இலங்கை அரசாங்கத்தால் மனிதர்களையும் ஏற்றும் வகையில் செய்யப்பட்டது.
இந்தியாவில் தொடர்வண்டி
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது. பின் தொடர்வண்டி சேவை இந்தியாவில் பெரும் அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டது. தொடர்வண்டி சேவை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும், மாவட்டங்களையும், கிராமங்களையும் இணைக்கிறது.
இந்தியாவில் ஐந்து ஆண்டு திட்டங்களின் மூலமாக மீட்டர் பாதைகள் அனைத்தும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. மேலும் சென்னை உட்பட பெருநகரங்களில் பறக்கும் தொடர்வண்டி, மெட்ரோ தொடர்வண்டி ஆகிய சேவைகள் செய்யப்படுகின்றன.
இந்தியாவில் பெயரிடப்பட்ட சில தொடர் வண்டிகளும் பயணிகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
- இராச்தானி விரைவுவண்டி: நாட்டின் தலைநகரத்தில் இருந்து மாநில தலைநகரத்தை இணைக்கும் இரயில்கள் இப்பெயரில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயங்குகின்றன.
- தூராந்தோ விரைவுவண்டி: இடையில் எங்கும் நிற்காமல் ஏதாவது இரண்டு பெருநகரங்களை இணைக்கும் பயணிகள் இரயில் இப்பெயரில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயங்குகின்றன.
- சதாப்தி விரைவுவண்டி: குறுகிய தொலைவில் உள்ள இரண்டு பெருநகரங்களை இணைக்கும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயங்குகின்ற இவ்வண்டி, இரவில் மீண்டும் புறப்பட்ட இடத்தை வந்தடையும்.
- மக்கள்சதாப்தி விரைவுவண்டி: குளிரூட்டப்பட்ட மற்றும் சாதாரண பெட்டிகளுடன் இயங்கும். சிக்கனமான செலவில் பல்வேறு நிறுத்தங்களில் நின்று செல்லும் வகை வண்டியாகும்.
அதிவிரைவு வண்டிகளின் வேகம் தடைபடாமல் தொடர்ந்து பயணிக்க வேண்டி இடைவண்டிகள் நிறுத்தப்பட்டு இத்தகைய விரைவு வண்டிகள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
இந்தியாவின் ரயில்வே மண்டலம் நிர்வாக நலன்கருதி 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- வடக்கு இரயில்வே,
- வடகிழக்கு இரயில்வே,
- வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே,
- கிழக்கு இரயில்வே,
- தென்கிழக்கு இரயில்வே,
- தென்மத்திய இரயில்வே,
- தென்னக இரயில்வே,
- மத்திய இரயில்வே,
- மேற்கு இரயில்வே,
- தென்மேற்கு இரயில்வே,
- வடமேற்கு இரயில்வே,
- மேற்குமத்திய இரயில்வே,
- வடமத்திய இரயில்வே,
- தென்கிழக்குமத்திய இரயில்வே,
- கிழக்குக்கடற்கரை இரயில்வே,
- கிழக்குமத்திய இரயில்வே ஆகிய பதினாறு மண்டலங்கள் ஆகும்.
Remove ads
காட்சியகம்
- தொடர்வண்டி
- இந்தோனேசியாவில் இரயில் வகை
- மேற்கு ஆஸ்திரேலிய மின் தொடர்வண்டி ஒன்று
- முழு அகல அறையுடன் அமைக்கப்பட்ட ஒரு இந்தோனேசிய இரயில்.
- முற்றிலும் கணிப்பொறியால் கட்டுப்படுத்தப்படும் ஒரு இரயில்.
- சிட்னியில் இரயில்கள்
- இந்திய இரயில்
- இந்தியாவில் பழங்காலத்தில் இயக்கிய நீராவித்தொடர்வண்டியானது, தற்போது புதுப்பிக்கப்பட்டு புதுச்சேரி நகரில் இயக்கத்தில் உள்ள நீராவித்தொடர்வண்டியின் புகைப்படம்
மேற்கோள்கள்
உசாத்துணை
மேலும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads